புதுடில்லி, ஜூலை 27- தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என ஒன்றிய அரசுக்கு திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பி உள்ளார்,
செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட நிதி எவ்வளவு என ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சகத்திடம் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
அதன் விவரம் பின்வருமாறு:
தமிழ் இலக்கியம், காட்சி மற்றும் நிகழ்த்துக் கலைகளின் முன்னேற்றத்துக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள், அதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு?
செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 2014ஆம் ஆண்டு முதல் அரசுமேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
கடந்த அய்ந்தாண்டுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட தொகைகள் எவ்வளவு? மேலும், வழங்கப்பட்ட மானியங்கள் எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும்.
கடந்த அய்ந்தாண்டுகளில் தமிழ் மொழியை தவிர்த்து பிற மொழிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட தொகைகள் எவ்வளவு? அத்துடன் வழங்கப்பட்ட மானியங்கள் எவ்வளவு என்பதை ஆண்டு மற்றும் மொழி வாரியாக பட்டியலிட்டு தெரி யப்படுத்தவும்.
பண்டைய தமிழ் கலாச்சார வரலாற்றை காட்சிப்படுத்தவும், அதுகுறித்து ஆய்வு, ஆராய்ச்சி மேற்கொள்ளவும், அத்துடன் தமிழ் மொழியின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட நடவ டிக்கைகள் என்ன?
இவ்வாறு எம்பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப் பூர்வமாக அளித்த பதில்கள் வருமாறு:
கடந்த 5 ஆண்டுகளில் லலித்கலா அகாதமி மற்றும் ஆர்.சி அமைப்பு இணைந்து சென்னையில் மட்டும் ஏறக்குறைய 33 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. சங்கீத நாடக அகாடமி தமிழ் நாட்டின் சார்பாக கரகாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட் டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்த்துக் கலை களை காட்சிப்படுத்தியுள்ளது. தென் மண்டல கலாச்சாரம் மய்யம் (SZCC), புதுச்சேரி கலை மற்றும் கலாச்சாரத் துறையுடன் இணைந்து, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர்கள் பிறந்த நாளையொட்டி பாரதி யார் விழா, பாவேந்தர் பாரதிதாசன் விழா, தமிழ் ஒலி விழா, வாணிதாசன் விழா, புதுவை சிவன் விழா என்றும் கவியரங்கம், பாட்டரங்கம், இசையரங்கம், பட்டிமன்றம் என்று பல்வேறு தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இலக்கியம், காட்சி, நிகழ்த்துக் கலைகளின் வளர்ச்சிக்காக நடப்பாண்டிற்கு ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ள மொத்த நிதி ரூபாய்365.35 கோடி.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT) எனும் தனி நிறுவனத்தை 2009 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நிறுவியது. அதன் மூலம் செம்மொழித்தமிழுக்கான, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணி களை மேற்கொண்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக் காக செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் திற்கு (CICT) ரூ. 48.71 கோடி மானியத்தொகை வழங்கப் பட்டு அதில் ரூ.48.43 கோடி செலவிடப்பட்டுள்ளது.
சிந்தி உருது, சமஸ்கிருதம், இந்தி, அட்டவணை மொழிகள், பட்டியலிடாத மொழிகள் என அனைத்து மொழிகளுக்கும் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.2,285.73 கோடி மானியம் வழங்கப் பட்டுள்ளது.
-இவ்வாறு பதில் அளித்தார்.
No comments:
Post a Comment