சாலை விதிகளை பின்பற்றினால் உலகம் முழுவதும் 5 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம்: ஆய்வு சொல்லும் செய்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

சாலை விதிகளை பின்பற்றினால் உலகம் முழுவதும் 5 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம்: ஆய்வு சொல்லும் செய்தி

சாலை விதிகள் முறையாக பின்பற்றப்பட்டால், ஆண்டிற்கு உலகம் முழுவதும் உள்ள 5 லட்சத்து 40 ஆயிரம் உயிர்களை காப்பற்ற முடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது கரோனா தொற்றைவிட சாலை விபத்தில் அதிகம் பேர் உயிரிழப்பதாக தகவல்கள் முன்பு வெளியிப் பட்டன. இந்நிலையில் தி லேன்செட் (The Lancet)  என்ற இதழில் சாலை விபத்து தொடர்பான ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர்

சரியான ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணி வது, மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது போன்ற சாலை விதிகளை பின்பற்றினால் 3 லட்சத்து 47 ஆயிரம் பேரிலிருந்து 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரை நாம் காப்பாற்ற முடியும் என்று ஆய்வு கூறுகிறது. சீனாவில் முறையாக ஹெல்மெட் அணிவதை பின்பற்றியதால் எல்லா வருடமும்  13,703 பேரின் உயிர்கள் பாதுகாக் கப்படுகிறது. பிரேசில் நாட்டில்  5, 802 உயிர்கள் பாது காக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் 5,683 உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன.

185 நாடுகளில் நடத்தப்பட்ட 75 ஆய்வுகளில் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணியாக இந்த நான்கு விஷயங்கள் கருதப்படுகிறது. வேகமாக வாகனத்தை ஓட்டுவது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சரியான ஹெல்மெட் அணியாமலிருப்பது, சீட் பெல்ட் அணியாமல் இருப்பது.

தற்போதைய நிலையை மாற்றுவதற்கு இந்த ஆய்வு பல பரிந்துரைகளை அளித்துள்ளது. சாலை விதிகள் தொடர்பாக நேரடியான முன்னெடுப்புகளை எல்லா நாட்டின் அரசுகளும் தங்கள் கொள்கை முடிவாக எடுத் துக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வின் முடி வுகள் கூறுகின்றன. இந்தியாவில்தான் சாலை விபத்து என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. எல்லா வருடமும்  1 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாலை விபத்தில்  மரண மடைகின்றனர்.  4 லட்சத்து 50 ஆயிரம் பேர்  படுகாயம் அடைகின்றனர். உலகத்தின் 1 சதவிகித மான வாகனங்களை வைத்துள்ள இந்தியாவில் விபத்தின் சதவிகிதம் 10 ஆக உள்ளது.  

No comments:

Post a Comment