ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் 2019 - 2020ஆம் ஆண்டுக்கான கல்வி செயல் திறன் தரக் குறியீட்டில் தமிழ்நாடு டாப் 5 இடங்களில் உள்ளது.
கல்வி செயல் திறன், உள்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வியை எளிதாக பெறும் வசதி ஆகியவற்றை மதிப்பிட்டு, கல்வி செயல் திறன் குறியீட்டு எண் ஒன்றிய அமைச் சகத்தால் அறிவிக்கப்படுகிறது. இதில் தமிழகம் 1000 புள்ளிகளுக்கு 906 புள்ளி கள் பெற்று டாப் 5 இடங்களில் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் 793 புள்ளி களை தமிழ்நாடு பெற்றது குறிப்பிடதக்கது.
மாவட்டம் அளவில் கல்வி செயல் திறன் குறியீட்டு புள்ளிகளில் சில மாவட்டங்கள் பின் தங்கி உள்ளது. உதாரணமாக கற்றல் வெளிப்பாட்டில் சென்னை குறைந்த மதிப்பெண் பெற்று , தரவரிசையில் கடைசி 10 மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இதுவே கற்றல் வெளிப்பாட்டில் தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்கள் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருக்கின்றன.
கல்வி உள்கட்டமைப்பு தரத்தில் சென்னை முன்னிலையில் இருந்தாலும், கற்றல் வெளிப்பாட்டில் சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைவிட பின்தங்கி உள்ளது. தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் இரண்டாம் கிரேட் பெற்றுள்ளன. இதுவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 27 மாவட்டங்கள் முன்றாம் கிரேட் பெற்று உள்ளன.
No comments:
Post a Comment