சோழிங்கநல்லூர் மாவட்ட கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியன் அவர்களை சந்தித்து மாவட்ட கழக தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் கைத்தறி ஆடை அணிவித்தார். அவர் விடுதலை 5 ஆண்டு சந்தா தொகை ரூபாய் பத்தாயிரம் வழங்கினார். மாவட்ட கழக செயலாளர் விஜய் உத்தமன் ராஜ்,மாவட்ட கழக அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட ப.க தலைவர் பி.சி.ஜெயராமன், வேலூர் பாண்டு, அவர் மகன், மற்றும் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட இலக்கிய அணித் தலைவர் பெ.சயராமன் அரையாண்டுச் சந்தா, கல்லக்குறிச்சி வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் எஸ்.பி.அரவிந்தன் அரையாண்டுச் சந்தா, ஆசிரியர் கி.அண்ணாதுரை அரையாண்டுச் சந்தாவை மாவட்டத் தலைவர் ம.சுப்பராயனிடம் வழங்கினர். அருகில் சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலைவர் பெ.பாலசண்முகம்,மூரார்பாளையம் கிளைக்கழகத் தலைவர் இரா.செல்வமணி. 25.07.2022 அன்று தனது பங்காக தஞ்சாவூர் மண்டல திராவிடர்கழகத் தலைவர் மு.அய்யனார்-ஆசிரியர் கலையரசி ஆகியோர்10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ. 20,000அய் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதியிடம் விடுதலை ஓராண்டு சந்தாவை ஒன்றிய தொழிலாளரணி செயலாளர் பிரபாகரன் வழங்கினார்.
இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில் விடுதலை நாளிதழ் சந்தா திரட்டும் பணி
மாவட்ட துணைத் தலைவர் மு.அட்டலிங்கம் தலைமையில் மாவட்ட மகளிர் ரணி தலைவர் அரங்கநாயகி, ஒன்றியத் தலைவர் கு.பொ பெரியசாமி, துணைத் தலைவர் மூ.முத்துசாமி, நகரச் செயலாளர் க.பாலச்சந்திரன் ஆகியோர் சந்தா திரட்டும் பணியில் பங்கேற்று வருகிறார்கள். அப்போது பேரூராட்சி தலைவர், மேனாள் பேரூராட்சி தலைவர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் ஓராண்டு மற்றும் அரையாண்டு சந்தா தொகைகளை மகிழ்வுடன் வழங்கினர்.
கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமையில் மாவட்ட செயலாளர் ச.சுந்தரராசன் சங்கராபுரம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பெ.பாலசண்முகம், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன்,இரிசிவந்தியம் ஒன்றிய கழக தலைவர் அர.சண்முகம் ,மூரார்பாளையம் கிளைக்கழகத் தலைவர் இரா.செல்வமணி ஆகியோர் மண்டலத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கரிடம் வழி காட்டுதலில் விடுதலை சந்தாக்களை சேகரித்தார்கள். சின்னசேலம் பேரூராட்சி தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் அரையாண்டுச் சந்தா, கடத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பேபி அய்யாசாமி அரையாண்டுச் சந்தா, மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் உமாராஜன் ஆண்டுச் சந்தா. இதைப்போல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் பெ.எழிலரசன் தலைமையில் ,செயலாளர் வீர. முருகேசன், அமைப்பாளர் சி.முருகன் கொண்ட குழுவினர் விடுதலைச் சந்தாவை சேகரித்து வருகின்றார்கள். இதைப் போலவே வருகிற 30.7.2022 அன்று அரியலூரில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு தனி பேருந்தில் தோழர்கள் வருகிறார்கள். தர்மபுரி மாவட்ட தலைவர் வீ.சிவாஜியிடம் மு.சிங்காரவேல் ஒரு ஆண்டு சந்தாவை வழங்கினார். உடன் தருமபுரி மேனாள் மாவட்ட தலைவர் எல்அய்சி மு பரமசிவம்.
மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதியிடம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார். தேவகோட்டை தோழர் ந.பாரதிதாசன் 6 விடுதலை சந்தாக்களை பேராசிரியர் மு.சு. கண்மணியிடம் வழங்கினார். மன்னார்குடி மாவட்டம்,கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மு .மணிமேகலை முருகேசன் விடுதலை சந்தா அளித்தார் மேலும் 40 விடுதலை சந்தா திரட்டி தருவதாக மகிழ்வுடன் ஒப்புக் கொண்டு சந்தா புத்தகங்களை பெற்றுக் கொண்டார். நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆர்.சி.பஎஸ்.சித்தார்த்தன் கழக பேச்சாளர் சு.சிங்காரவேலு கழகத் தோழர்கள் மன்னை சித்து மு.சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர் 25-07-2022 அன்று தனது பங்காக தஞ்சாவூர் பொறியாளர்கள் கோ.இரவிச்சந்திரன். கீதப் பிரியா ஆகியோர் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டலத்தலைவர் மு.அய்யனார், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர். அ.டேவிட் ஆகியோரிடம் வழங்கினர், உடன் பொதுக்குழு உறுப்பினர் மணிமேகலைசுப்பையா.
25.7.2022 அன்று ஒரத்தநாடு பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் 10 விடுதலை சந்தாக்கள் விடுதலை வசூல் குழு பொருளாளர் நெடுவை கு. நேருவிடம் தஞ்சை மாவட்ட கழக செயலாளர் அ. அருணகிரி தலைமையில் தஞ்சை மாவட்ட கழக துணைச் செயலாளர் அ.உத்திராபதி, நகர கழக தலைவர் பேபி ரெ ரவிச்சந்திரன் நகர திராவிடர் கழக செயலாளர் ரஞ்சித் குமார் கண்ணந்தங்குடி கீழையூர் கிளை கழக இளைஞரணி தலைவர் இராஜதுரை ஆகியோர் முன்னிலையில் விடுதலை சந்தா வழங்கினார்கள், மதுரை பொதுக்குழுவில் 10 சந்தா வழங்கினார். திருநெல்வேலி அ.இ.அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ந.கணேசராஜா விடுதலை சந்தாவை கழக மாவட்டச் செயலாளர் இரா.வேல் முருகனிடம் வழங்கியதோடு ப.திருமாவேலன் அவர்கள் எழுதிய'இவர் தமிழரில்லை என்றால் எவர் தமிழர்' நூலை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நெல்லை மாவட்டப் பொறுப்பாளர் பேராசிரியர் நீல கிருஷ்ண பாபு கலந்து கொண்டார். சிவசைலம் 'நல்வாழ்வு இயற்கை மருத்துவ ஆசிரம' மருத்துவர் இரா.நல்வாழ்வு மற்றும் ஆலங்குளம் பேராசிரியை ராஜலட்சுமி -காந்திமதி ஆகியோர் விடுதலை சந்தாக்கள் வழங்கினர். குமரிமாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ் குமார் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். 26.07.2022 அன்று ரெட்டியார் சத்திரம் திமுக ஒன்றிய செயலாளரும், ரெட்டியார் சத்திரம் ஒன்றிய பெருந்தலைவரும், சீரிய பகுத்தறிவாளரும், பெரியார் பெருந்தொண்டருமான ப.க. சிவகுருசாமி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன் அவர்களின் நகைக்கடைக்கு வருகை தந்தார். அவருக்கு பிரபாகரன் பொன்னாடை அணிவித்தார். ஏற்கெனவே இரண்டு சந்தாக்கள் வழங்கி, மேலும் 20 சந்தாக்கள் வழங்குவதாக உறுதியளித்திருந்த நிலையில், மேலும் 20 சந்தாக்களை மிக்க மகிழ்வுடன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா. கமல்குமாரிடம் வழங்கினார். உதவியாளர் உதயகுமார் உடனிருந்தார். அரியலூர் மாநாட்டில், விடுதலை சந்தாக்கள் வழங்க இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என விடுதலையில் பார்த்துக்கொண்டே வருவேன். 5, 4 என நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்றார் பெரியார் பெருந்தொண்டர் ப.க. சிவகுருசாமி. சென்னை மாநகராட்சி மன்ற 45ஆவது வார்டு உறுப்பினர் இளஞ்சேகுவேரா (எ) பொறியாளர் கோ.கோபிநாத் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச் செல்வனிடம் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார்.
No comments:
Post a Comment