40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் சென்னை பயணத்தின் போது சேகரித்த விடுதலை சந்தாவினை வழங்கினார். உடன் மாநில ப.க. தலைவர் தமிழ்ச்செல்வன்

தாம்பரம் கழக மாவட்டத்தில் விடுதலை சந்தா திரட்டும் பணி

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தாம்பரம் மாவட்ட  கழக தலைவர் ப.முத்தையன், மற்றும் தாம்பரம் நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன் ஆகியோர் விடுதலை நாளிதழ் சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர். தாம்பரம் மாநகராட்சி 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.ஆர்.கோபி ஓராண்டு சந்தாவும், குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கோ.தட்சணாமூர்த்தி ஓராண்டு சந்தாவும், தாம்பரம் பகுதியில் கலைவாணி கல்வி நிலைய(இன்ஸ்டிடியூட்) உரிமையாளர் ரி.சிவராமன் அரையாண்டு சந்தாவும்,  கரசங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் வீ.சுதாகரன் ஓராண்டு சந்தாவும்,   கரசங்கால் ஊராட்சி மன்ற 3ஆவது வார்டு உறுப்பினர் பா.தாமோதரன் ஓராண்டு சந்தாவும், குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.கர்ணன் ஓராண்டு சந்தாவும், குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சி பகுதியில் வசிக்கும் தாம்பரம் தேவி லாண்டரி (சலவை)உரிமையாளர் கோ.நடராஜன்  ஓராண்டு சந்தாவும்,  கரசங்கால் ஊராட்சி மன்ற மேனாள் துணைத் தலைவர் மற்றும் அ.தி.மு.கழக கிளைக் கழகச் செயலாளர் கோ.இரவி  ஓராண்டு சந்தாவும், குன்றத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி மனோகர்  ஓராண்டு சந்தாவும், குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சி மன்ற 1ஆவது வார்டு உறுப்பினர் தனலட்சுமி தாமோதரன் ஓராண்டு சந்தாவும்,  பெரியார் கொள்கை உணர்வாளர் படப்பை சந்திரசேகரன் அரையாண்டு சந்தாவும்,  குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பெரியார் நகர் ஊராட்சி மன்ற உறுப்பினர் இரகு  அரையாண்டு சந்தாவும்,  படப்பை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கி.ஜி.வி.வினோத் ஓராண்டு சந்தாவும் வழங்கினர்.

பேராசிரியர் ஆ.செல்லப்பா, நெல்லை மாவட்டத் தி.மு.க இலக்கிய அணித் தலைவர் குமார.சுப்பிரமணியம்,  மருத்துவர் க.வேல் மணி, பேராசிரியர் வே.மாணிக்கம் ,  ஆசிரியர் வ.பால் கதிரவன், திருநெல்வேலி மாமன்ற உறுப்பினர் கோகிலவாணி சுரேஷ்,  அ.இ.அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்  கல்லூர் இ.வேலாயுதம் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தாக்களை  மாவட்டச் செயலாளர் இரா. வேல்முருகனிடம் வழங்கினர்.   உடன் மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்டப் ப.க. செயலாளர் சு.திருமாவளவன் மற்றும்  எஸ்.வி.சுரேஷ்  பேராசிரியர் நீல கிருஷ்ண பாபு  ஆகியோர் உள்ளனர். 

சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில்  "உலகின் பார்வையில் திராவிட மாடல்" கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்த பிரித்தானியா, கெரியட்-வாட் பல்கலைக்கழக "பேராசிரியர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து", விடுதலை ஆண்டு சந்தாவை சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர், மு. சண்முகப்பிரியனிடம் வழங்கினார். உடன் தென்சென்னை இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை. 

தருமபுரி மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மேனாள் மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் த. யாழ்திலீபன் ஆகியோரிடம் கட்டரசம்பட்டி பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்  க.இராமச்சந்திரன், வகுத்துப்பட்டி ஆசிரியர் கலைவாணன்,கம்பைநல்லூர் ஆசிரியர் அறிவுமணி,(பெண்ணாகரம்) ஓசூரில் பணிபுரியும் மருத்துவர் சிவக்குமார்,கோபிநாதம்பட்டி பள்ளி ஆசிரியர்கள் மூ.சிவக்குமார்,நாகராஜ் ஆகியோர் ஓராண்டு  விடுதலை சந்தாக்களை வழங்கினர். 

வழக்குரைஞர் வேலாயுதம் 5 ஆண்டு சந்தா, பாலமுருகன் 1ஆண்டு சந்தா,வழக்குரைஞர் வெங்கடேசன் 1 ஆண்டு சந்தா, காந்திமதி கண்ணன் 5ஆண்டு மற்றும் தோழர்கள் வழங்கிய சந்தா தொகை 26,000 ரூபாய் மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன்,மாநிலஅமைப்பு செயலாளர் ஊமை.செயராமன் ஆகியோரிடம் 2 ஆவது தவணையாக வழங்கப்பட்டது.

திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் சைதை மா. அன்பரசன் ஓராண்டு சந்தாவினையும், சைதை திமுக பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆர். கிருஷ்ணகுமார் அரையாண்டு சந்தாவினையும், மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனியிடம் வழங்கினர்.



 





No comments:

Post a Comment