40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடங்கி வைக்க, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி.சேகர், நகர செயலாளர் கா.தென்னவன், மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசபாபதி, மாவட்ட ப.க செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி ரெங்கசாமி, மதுக்கூர் ஒன்றிய தலைவர் புலவஞ்சி அண்ணாதுரை, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், பட்டுக்கோட்டை நகர இளைஞரணி சக்தி, மதுக்கூர் ஒன்றிய துனைத் தலைவர் சிவாஜி உள்ளிட்டோர் வசூல் பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில், மாவட்டச்செயலாளர் கா.சு.ரெங்கசாமி, நகரச்செயலாளர் வெ.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மேட்டுப்பாளையம், குட்டைப்புதூர் நாராயணன், சிவகாமி ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 2 விடுதலை சந்தா வழங்கினார். மேலும் சந்தாவுக்கான ரசீது புத்தகம் அளிக்கப்பட்டது, மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார்கள் மேட்டுப்பாளையம், கழகபொதுக்குழு உறுப்பினர்கள் சாலைவேம்பு சுப்பையன், சாவித்திரிசுப்பையன் ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை சந்தா வழங்கினர். மேலும் சந்தாவுக்கான ரசீது புத்தகமும் அளிக்கப்பட்டது, மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு சந்தாக்களைத் திரட்டித் தருவதாக உறுதியளித்தனர்.

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி சேகர், கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் காளிதாசன், மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் அ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.நல்லத்தம்பி விடுதலை சந்தாவை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.அன்பழகன் மாவட்ட துணைச் செயலாளர் காளிதாசன், மாவட்ட ப.க.செயலாளர் புலவஞ்சி காமராஜ் ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் ஒன்றிய தலைவர் புலவஞ்சி அண்ணாத்துரை, ஒன்றிய துணைத்தலைவர் சிவாஜி, ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.  ஜி.சி.மாதேஸ் (கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சங்கத் தலைவர் (பாலக்கோடு) தருமபுரி மாவட்டம்) தமது குடும்பத்தின் சார்பாக ஓராண்டிற்கான விடுதலை சந்தாவினை,  மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்), மா.முனியப்பன் (கருநாடக மாநில மாணவர் கழகத் தலைவர்) ஆகியோரிடம் வழங்கினர்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
சிவகங்கை, காரைக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் விடுதலை சந்தா திரட்டும் பணி!
சிவகங்கை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ச.இன்பலாதன்-மருத்துவர் மலர்கன்னி  இணையர் அய்ந்து ஆறுமாத சந்தாக்கள்,  கழகப் பொதுக்குழு உறுப்பினர் புரவலர் வேம்பத்தூர் க.வீ.செயராமன் 10ஆறுமாத விடுதலை சந்தா,  மாவட்ட துணைத் தலைவர் திருக்கோட்டியூர் ஜெ.தனபாலன்-சிவகாமி இணையர் ஓராண்டு விடுதலை சந்தா, சிவகங்கை மாவட்ட செயலாளர் காளாப்பூர் இராசாராம்  ஓராண்டு விடுதலை சந்தா, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன் ஆறுமாத விடுதலை சந்தா, காரைக்குடி மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை இரண்டு ஆறுமாத விடுதலை சந்தாக்கள்,  காரைக்குடி மேனாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.சுந்தரம் அய்ந்து ஆறுமாத விடுதலை சந்தா, காரைக்குடி நகரக் கழகச் செயலாளர் கலைமணி ஆறுமாத விடுதலை சந்தா, மாவட்ட துணைத் தலைவர்  தேவக்கோட்டை மணிவண்ணன் அய்ந்து ஆறு மாத விடுதலை சந்தாக்களை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். 

காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் எஸ். இளமதி அய்ந்து ஆறுமாத விடுதலை சந்தா, காரைக்குடி மாவட்ட தலைவர் ஆசிரியர் அரங்கசாமி-சாரதா இணையர் இரண்டு விடுதலை சந்தாக்கள்,  மண்டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் பிரவீன் முத்துவேல் பத்து விடுதலை சந்தா ரசீது,  மண்டல தலைவர் ராமேஸ்வரம் கே.எம். சிகாமணி இரண்டு விடுதலை சந்தா, இராமநாதபுரம் மாவட்ட தலைவர் மண்டபம் முருகேசன் நான்கு ஆறுமாத மாத விடுதலை சந்தா, பொதுக்குழு உறுப்பினர் இராமநாதபுரம் கயல் கணேசன்ஆறுமாத விடுதலை சந்தா,  இராமநாதபுரம்  நகர செயலாளர் பழ. அசோகன் ஆறுமாத விடுதலை சந்தாக்களை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர்.

கே.சி.ரவிச்சந்திரன் திமுக. காடையாம்பட்டி - அரையாண்டு சந்தா, காடையாம்பட்டி திமுக பேரூர் கழக செயலாளர் கே.ஆர். பிரபாகரன் ஆண்டு சந்தா வழங்கினர். காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் திமுக, காடையாம்பட்டி திமுக மாவட்ட பிரதிநிதி ஆகியோர் ஆண்டு சந்தாக்களை ஓமலூர் சவுந்தரராசனிடம் வழங்கினர். மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில், மாவட்டத் துணைத்தலைவர் தலைவர் முத்து. முருகேசன், மாவட்ட  செயலாளர் சண்முகம், மண்டல இளைஞரணி செயலாளர் முனீஸ்வரன், மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் தங்கவேல், காங்கேயம் நகரத் தலைவர் மணிவேல், நத்தக்காடையூர் குமரவேல், தாராபுரம் வீராசாமி ஆகியோர் முன்னிலையில் கோவை மண்டல இளைஞரணி செயலாளர் முனீஸ்வரன் மூலமாக 10 ஆண்டு விடுதலை சந்தாக்களை கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார், மேலும்சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார்கள் (18.7.2022).






No comments:

Post a Comment