அவினாசி இராமசாமி 5 சந்தா முதல் தவனையாக வழங்கினார்
60 ஆண்டுகால விடுதலைஆசிரியர் பணிக்கு நன்றி காட்டிடும் வகையில் 60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணி திருப்பூர் மாவட்டத்தில் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் யாழ். ஆறுச்சாமி தலைமையில் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் அவினாசி பக தலைவர் இராமசாமி 5 சந்தா தொகை வழங்கி 20 சந்தாவுக்கான புத்தகங்களையும், முத்து.சரவணன் 10 சந்தாவுக்கான புத்தகத்தினையும் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரி டமிருந்து பெற்றுக்கொண்டனர். (10.7.2022)
-----------
தமிழர் தலைவரிடம் ‘விடுதலை' சந்தாக்கள் வழங்கல்
படம் 1: பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 5 ஆண்டு விடுதலை சந்தாவுக்கான காசோலையை வழங்கினார் (12.07.2022). படம் 2: சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன் - வி.விஜித்ரா இணையரின் மகன் ச.வி.இன்பா (எ) ராவணப்பிரியனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து அரையாண்டு விடுதலை சந்தா வழங்கினர் (12.07.2022). படம் 3: வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார். (9.7.2022, பெரியார் திடல்)
-----------
மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
படம் 1: சீர்காழி இரா.அண்ணாதுரை ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதோடு தன் பொறுப்பில் சந்தா சேகரித்துத் தர ஒரு ரசீது புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.
படம் 2: சீர்காழி நகராட்சி 14ஆவது வார்டு உறுப்பினர் ஜெயந்திபாபு ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். நிகழ்வுகளில் மயிலாடுதுறை மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன் மற்றும் சீர்காழி ஒன்றிய செயலாளர் எஸ்.பி.செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
-----------
திருப்பூர் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணி திருப்பூர் மாவட்டத்தில் 11-07-2022 அன்று உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் யாழ். ஆறுச்சாமி தலைமையில் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கு.திலீபன் ஆகியோர் முன்னிலையில் தொமுச.மாநில துணைச் செயலாளர், மாநகர தி.மு.க துணைச் செயலாளர் மு.நாகராஜன் 10 சந்தாவுக்கான புத்தகங்கள், திருப்பூர் விஜயக்குமார் அவரது இணையர் சுதா, மகள்கள் ஓவியா, சங்கமித்திரா குடும்பத்தின் சார்பில் ஒரு ஆண்டு சந்தா மேலும் 10 சந்தாவுக்கான புத்தகங்கள், திருப்பூர் 55ஆவது வட்ட தி.மு.க. பிரதிநிதி முருகேசன்அவரது இணையர் கவிதா, குழந்தைகள் இனியா,ஆதவன் குடும்பத்தின் சார்பில் ஓர் ஆண்டு சந்தா மேலும் 10 சந்தாவுக்கான புத்தகங்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார், நன்கொடை புத்தகத்தை பெற்றுக்கொண்டு சந்தா திரட்டித் தருவதாக உறுதியளித்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் மு.ஆனந்த முனிராசன், மண்டல தலைவர் மு. நாகராஜன், தி. தொ.க. பேரவை துணைத் தலைவர் தி.க. செல்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா. கமல் குமார் ஆகியோர் விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். ரெட்டியார் சத்திரம் திமுக ஒன்றிய செயலாளரும், ரெட்டியார் சத்திரம் ஒன்றிய பெருந்தலைவருமான ப.க. சிவகுருசாமி இரண்டு சந்தா மற்றும் இரண்டு சந்தா புத்தகங்களையும் பெற்றுக்கொண்டார். வழக்குரைஞர்.காமாட்சி ஓராண்டு சந்தா, பகுத்தறிவாளர் சங்கிலி மற்றும் திண்டுக்கல் ஆச்சீஸ் உணவக உரிமையாளர் வெங்கடேசன் ஆகியோர் 5 விடுதலை ஆண்டு சந்தாக்களை வழங்கினர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகர கழக சார்பில் மாராச்சேரியில் இல்லம் தோறும் 'விடுதலை' உள்ளந்தோறும் 'பெரியார்' மூன்று விடுதலை சந்தா வாங்கப்பட்டது. உடன் மண்டச்செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நகரச்செயலாளர் ப.நாகராஜன். பண்ணத்தெரு ஊராட்சி மன்ற தலைவர் ச.ரெத்தன குமார், ச.சுரேஷ், வேணு.காளிதாஸ். (10.07.2022).
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி அன்புமணியின் மகன் பன்னீர் செல் வம் விடுதலை ஓராண்டு சந்தாவை வி. சிவாஜி யிடம் வழங்கினார்
-----------
ஒரத்தநாடு ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் 500 விடுதலை சந்தாக்கள் திரட்டி வழங்கிட முடிவு
மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி முன்னிலையில் கழகப்பொறுப்பாளர்கள் விடுதலை சந்தா புத்தகங்களை பெற்று கொண்டு சந்தா திரட்டி தருவதாக உறுதியளித்தனர் (11.7.2022).
காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழக செயலாளர் முனைவர் பா. கதிரவன் 20 சந்தா ரசீதை கழக அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் பெற்றுக் கொண்டார். உடன் அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், காஞ்சிபுரம் அசோகன் உள்ளனர்.
காஞ்சிபுரம் பெரியாண்டவர் சிமெண்ட் பைப்ஸ் உரிமையாளர் பெரியார் பற்றாளர் சி.முரு கேசன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கி யுள்ளார். (9.7.2022)
காஞ்சிபுரம் பெரியாண்டவர் சிமெண்ட் பைப்ஸ் உரிமையாளர் பெரியார் பற்றாளர் சி.முரு கேசன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கி யுள்ளார். (9.7.2022)
No comments:
Post a Comment