தமிழர் தலைவர் அவர்களின் 60 ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியர் பணிக்கு நன்றி காட்டிடும் வகையில் 60 ஆயிரம் சந்தா சேர்க்கும்பணி திருவாரூர்மாவட்டத்தில் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வீ.மோகன் தலைமையில், மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராசு, மாநில தொழிலாளரணி செயலாளர் க.வீரையன் முன்னிலையில் முக்கிய பிரமுகர்கள், கழகத்தோழர்களின் இல்லம் தேடிச் சென்று சந்தித்து சாதா ரசீது புத்தகத்தை ஒப்படைத்தோம்.
01-07-2022 அன்று அதிகாலை 5.50 க்கு தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து சில மணித்துளிகள் உரையாடி விடைபெற்று தஞ்சை இல்லம் வருகை தந்து பின்பு தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் காலை 7.15க்கு புறப்பட்ட பேருந்தில் பயணம் செய்து காலை 8.30க்கு திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரியில் இறங்கினேன். அங்கு வருகை தந்த திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்த ராசு, விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் குடவாசல் க.வீரையன் ஆகியோருடன் இருசக்கர வாகனங்கள் இரண்டில் நான்கு பேரும் விடுதலை சந்தா சேர்ப்பு பயணம் மேற்கொண்டோம்
கொரடாச்சேரி ஒன்றியம்
கொரடாச்சேரி, விடையபுரம், கண்கொடுத்தவணிதம், பருத்தியூர் பகுதிகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கழகத்தோழர்கள் வருகை தந்து வர வேற்று மகிழ்ந்தனர்.
குடவாசல் ஒன்றியம்
அம்மையப்பன் வழியாக நெய்க்குப்பை, பாளையூர், மஞ்சக்குடி, குடவாசல், நார்சிங்கம்பேட்டை, அன்னவாசல், எரவாஞ்சேரி, வில்லியனூர் பகுதிகளில் சுற்றுவட்டார பகுதி காகத் தோழர்கள் வருகை தந்து வரவேற்று மகிழ்ந்தனர்.
நன்னிலம் ஒன்றியம்
நன்னிலம், அச்சுதமங்கலம், சன்னாநல்லூர் பகுதிகளில் கழகத் தோழர்களை சந்தித்தோம்
திருவாரூர் ஒன்றியம்
ஆண்டிப்பந்தல் வழியாக, சூரனூர், திருவாதிரைமங்க ளம், வட குடி சோழங்கநல்லூர், ஆமூர், ஓடாச்சேரி, பவுத்திர மாணிக்கம் ஆகிய பகுதிகளில் கழகத்தோழர்களை சந்தித்தோம்
திருவாரூர் நகரம்
மருதப்பட்டினம், சிவம்நகர், பகுதிகளில் கழகத் தோழர்களை சந்தித்தோம். அனைத்து இடங்களிலும் கூடியிருந்த முக்கிய பிரமுகர்கள், கழகப் பொறுப்பாளர்கள் தோழர்களிடம் விடுதலை ஆசிரியராக நம் தலைவர் 60 ஆண்டுகள் தொடாற்றியதின் மகிழ்வாக 60,000 விடுதலை சந்தாக்களை 40, நாட்களில் திரட்டி அளிக்க வேண்டும் என தெரிவித்தவுடன் மகிழ்வுடன் ஏற்று எங்கள் முழு உழைப்பையும், சக்தியையும் கொடுத்து திருவாரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ள 1,500 சந்தாக்களை எட்டு வோம் என உற்சாகம் பொங்க தெரிவித்தனர்.
எளிய தோழர்களை சந்திக்க எளிமையான பயணம்
திருவாரூர் மாவட்டத்தில் நமது கழகத்தோழர்கள் பெரும்பாலும் எளிய தோழர்கள் விவசாய தொழிலாளர்கள் ஆண்கள் பெண்கள் என குடும்பம் குடும்பம்பமாக இயக்கத்தில் உள்ளவர்கள். எனது உறவினர்கள், அதிகம் உள்ள பகுதி திருவாரூர், நாகை பகுதி இந்தப் பகுதி தோழர்களை சந்திக்கும்போது எனது தாய்வீட்டுக்கு வரும் உணர்வை பெறுகிறேன் என நமது தலைவர் ஆசிரியர் எப்போதும் கூறுவார். அதே உணர்வை இன்று நாங்கள் பெற்றோம்
காலை 8.30க்கு கொரடாச்சேரியில் தொடங்கிய பயணம் இடையில் தோழர்களின் தேனீர் உபசரிப்பு மதிய உணவு நன்னிலம் கரிகாலன் இல்லம் என பயணம் தொடர்ந்துஇரவு 8.00 மணிக்கு திருவாரூரில் நிறைவு அடைந்தது
கிராமப் பகுதிகளின் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தாலும் 185 கிலோமீட்டர் கடுமையான வெயிலில் இருசக்கர வாகனப் பயணம் கடுமையாக இருந்தாலும் 75 வயது மாவட்டத் தலைவர் வீ.மோகன், 72 வயது மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராசு, 55 வயது விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் க.வீரையன் ஆகியோர் எடுத்தக்காரியத்தை முடிப்பதில் காட்டிய ஆர்வம், உற்சாகம் 52 வயதுடைய எனக்கு பயணம் களைப்பை, சோர்வை ஏற்படுத்தவில்லை எளிய தோழர்கள் காட்டிய அன்பும், உற்சாகமும் எளிமையான பயணமும் மேலும் நமக்கு உற் சாகத்தை தந்தது.
8.30 மணிக்கு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் புறப்பட்ட பேருந்தில் பயணம் செய்து இடையில் நீடாமங்கலம் ரயில்வே கேட்டில் பேருந்து 20 நிமிடம் நிறுத்தப்பட்டு இரவு 10.30 மணிக்கு தஞ்சை இல்லம் வருகை தந்து இரவு உணவுக்கு பிறரு 11.30க்கு ஓய்வுக்கு சென்றேன்.
அன்புத் தலைவர் ஆசிரியரிடம்
கழகத்தோழர்கள் அன்பு கோரிக்கை
விடையபுரம்
தந்தைபெரியார் கடவுள்மறுப்பு முழக்கத்தை அறிவித்த ஊரான விடையபுரத்தில் நினைவு சின்னத்தை விரைவில் கட்டிமுடிக்க வேண்டும்.
பருத்தியூர்
எங்கள் ஊரில் 80 குடும்பங்கள் திராவிடர் கழகத்தில் உள்ளோம். கட்டி முடிக்கப்படாமல் உள்ள திருமண மண்டபத்தை கட்டிமுடித்து உதவிட வேண்டும்.
குடவாசல் மஞ்சக்குடி
எங்கள் ஊரில் நமது கழக இடத்தில் பெரியார் சிலை அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்கவேண்டும் என மறைந்த கல்யாணி குடும்பத்தினர் தெரிவித்தனர்
அச்சுதமங்கலம் கணேசன்
"எனக்கு வயது 91 நான் இறந்தால் கருப்புச் சட்டைக் காரர்கள் கூட்டம் அதிகம் இருக்க வேண்டும். எனது உடலுக்கு மாலை போடக்கூடாது. எந்தவித சடங்கும் செய்யக்கூடாது. 3 மணி நேரத்தில் எனது வீட்டுக்கு பின் என்னை புதைத்துவிட வேண்டும். எனது நிழற்படத்தை இப்பொழுதே இதோ எனது வீட்டில் நானே மாட்டி வைத்து உள்ளேன். இறப்புக்கு பிறகு எந்த நிகழ்வும் கூடாது. அன்றோடு முடித்துவிட வேண்டும். இது எனது கட்டளை!" என அச்சுதமங்கலம் கணேசன் தெரிவித்தார்.
அவருக்கு நாம் பயனாடை அணிவித்து மகிழ்ந்தோம் உடனே வீட்டின் உள்ளே சென்று வந்து பெட்ரோல் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என ரூ 500அய் மாவட்டத் தலைவரிடம் கொடுத்து மகிழ்ந்தார்.
"நம்மால் முடியாதது யாராலும் முடியாது"
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்"
- தமிழர் தலைவர் ஆசிரியர்
திருவாரூர் முதல் தஞ்சை வரை பேருந்து பயணத்தில் எழுதியது
அன்புடன்
இரா.ஜெயக்குமார், பொதுச்செயலாளர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment