3ஆவது நாளும் நாடாளுமன்றம் முடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

3ஆவது நாளும் நாடாளுமன்றம் முடங்கியது

புதுடில்லி, ஜூலை 21- நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 3ஆவது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களில் ஈடுபட்டதால் மக்களவை, மாநி லங்களவை என 2 அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

மக்களவை

இந்நிலையில் நேற்று (20.7.2022) விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி, அக்னிபாதை திட்டம் ஆகியவற் றுக்கு எதிராக முழக்கம் எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்க ளவையை முடக்கினர்.

மக்களவை நேற்று காலை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மய்யப் பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப் பினர். பாக்கெட்டில் அடைக்கப் பட்ட பால், தயிர் உள்ளிட்ட அத் தியாவசிய உணவுப் பொருட் களுக்கு ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் முழக் கம் எழுப்பினர். மேலும் விலை வாசி உயர்வு தொடர்பாக விவா திக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த அவைத் தலைவர் ஓம் பிர்லா இதை ஏற்க மறுத்தார்.

தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகலிலும் இதே நிலை நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது.

மாநிலங்களவை

மாநிலங்களவையிலும் இதே பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக மாநிலங் களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட மேனாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் அவை கூடியபோது எதிர்க்கட்சி களின் அமளி தொடர்ந்ததால் அவையில் தொடர்ந்து கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 3ஆவது நாளாக மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நிகழ்ச்சிகள் நடைபெறாமலேயே அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப் பினர்கள் நேற்றும் (20.7.2022) ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி. ஆகிய வற்றுக்கு எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment