3.5 கோடி வாடிக்கையாளர்களால் எரிவாயு உருளை ஒன்றுகூட வாங்க முடியாத நிலையில் விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் பாஜக அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

3.5 கோடி வாடிக்கையாளர்களால் எரிவாயு உருளை ஒன்றுகூட வாங்க முடியாத நிலையில் விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் பாஜக அரசு

 ராகுல் காந்தி சாடல்

புதுடில்லி, ஜூலை1- கடந்த நிதி ஆண்டில் (2021-2022) 3 கோடியே 59 லட்சம் வாடிக்கையாளர்களால் ஒரு சிலிண்டர் கூட வாங்க முடியவில்லை என்று  ஊடக தகவல் ஒன்று வெளி யாகி உள்ளது. அதை சுட்டிக் காட்டி, காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் 'உஜ்வாலா' திட்டம் பற்றி பெட் ரோல் விற்பனை நிலையங்களில் இருந்து பத்திரிகைகள் வரை விளம்பரப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப் படுகிறது. படிப்படியாக சிலிண்டர் விலை உயர்ந்து, இன்று ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. பிரதமர் மோடி, ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர்களுக்கு ஒன்று என 2 இந்தியாக்களை உருவாக்கி இருக்கிறார். அவர் ஒரு பொதுக்கூட்டத்தில், மண்ணெண் ணெய் அடுப்பில் சமைக்கும் தாய்மார்கள் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசினார். ஆனால், ஒரே ஆண்டில் அவர் 3 கோடியே 59 லட்சம் பேரை மண் ணெண்ணெய் அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளி விட்டார். எப்படி இவ் வளவு போலிக் கண்ணீர் வடிக்கிறீர்கள், பிரதமரே?" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment