சென்னை, ஜூலை 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நேற்று (3.7.2022) வரை 3.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர கடந்த ஜூன் 22-ம் தேதி முதல்இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இணையதளம் வழியாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், அவரவர் படித்த பள்ளிகள் அல்லது, மாநிலம் முழுவதும் உயர்கல்வித்துறையால் அமைக்கப் பட்டுள்ள 110 சிறப்பு உதவி மய்யங்கள் மூலம் விண்ணப் பிக்கலாம் என்றும்உயர்கல்வித் துறை தெரிவித்திருந்தது.
கல்லூரிகளில் சுமார் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித் திருந்த நிலையில், அறிவிப்பு வெளியான நாள் முதல் www.tngasa.in மற்றும் www.tngasa.org ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் ஆர்வமாக விண் ணப்பிக்கத் தொடங்கினர். அந்தவகையில், விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதல் இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்து 904 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment