தொழில் புரிய ஏற்ற இடம் இந்திய அளவில் 3ஆவது இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

தொழில் புரிய ஏற்ற இடம் இந்திய அளவில் 3ஆவது இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை 2 தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழ்நாடு 3ஆவது இடத்தை பெற்றதற்காக தொழில்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுள் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. 

புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் 14ஆவதுஇடத்தில் இருந்து 3ஆவது இடத்துக்கு தாவியுள்ளோம். தொடர்ச்சியான, திட்டமிட்ட நடவடிக்கைகளால் முதலீடுகளுக்கான முக்கிய மய்யமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட் டுக்கள்’’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment