புதுடில்லி, ஜூலை 31- இந்தியாவில் வேதக்கல்விக்கு என்று தனியாக வாரியங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசின் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்விக்கென ஒன்றிய அரசு சார்பிலும் மாநில அரசுகள் சார்பிலும் பல்வேறு வாரியங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஒன்றிய அரசால் சிபிஎஸ்இ, அய்சிஎஸ்இ ஆகிய வாரியங்களின் கீழ் பள்ளிக் கல்விக்கான வகுப்பு கள் - தேர்வு கள் நடத்தப்படுகின்றன. மாநிலங்களில் அந்தந்த மாநிலத்திற்கேற்ப கல்வி வாரியங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து, அதனை நாடு முழுவதும் திணிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், தற்போது புதிதாக வேதக்கல்வியை வழங்கப் போவதாகவும், அதற்குத் தனியாக இரண்டு கல்வி வாரியங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மோடி அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில ளித்துள்ள ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், “வேதக்கல்விக்கு என்று பிரத்யேகமாக ‘மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ரிய வேத வித்யா சமஸ்கிருத சிக்ஷா வாரியம்’(Maharishi Sandipani Rashtriya Ved Sanskrit Shiksha Board - MSRVSSB) மற்றும் ‘பாரதிய சிக்ஷா வாரியம்’ (BSB) ஆகியவை அமைக்கப்படும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும், இந்தியாவில் வேதக்கல்வி முறையை வளர்ப்பதற்காக ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை யின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி அமைப்பு களில் ஒன்றான உஜ்ஜைனியைச் சேர்ந்த ‘மகரிஷி சாந்திபனி ராஷ்ட்ருட வேத வித்யா பிரதிஷ்தான்’
(MSRVVP) உதவி யுடன் இந்த 2 வாரியங்கள் அமைக் கப்படும் என்றும், வேதங்களை நவீன கல்வியுடன் இணைக்கும் நோக்கில் இந்த வாரியங்கள் உருவாக்கப் படுவதாகவும் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment