தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் மூலம் 18 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் மூலம் 18 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

சென்னை,ஜூலை25-தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நடந்த 32ஆவது சிறப்பு மெகா முகாமில் 18 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டது.

32ஆவது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் தமிழ் நாடுமுழுவதும் ஒரு லட்சம் இடங் களில் நேற்று  (24.7.2022) நடை பெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேருந்து நிலை யங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை யில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத் தில் நடந்த தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத் துவத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், பொது சுகா தாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த சிறப்பு மெகா முகாமில் 18 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை  மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுகாதார, முன்களப் பணி யாளர்கள், 2 தவணை போட்டு 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு அரசு மய்யங்களில் பூஸ்டர் தவணை இலவசமாக போடப்படுகிறது. 18-59 வயதின ருக்கான பூஸ்டர் தவணை, தனியார் மருத்துவமனைகளில் கட்டணத் தில் செலுத்தப்பட்டுவந்தது. அத னால், பூஸ்டர்தவணை போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை குறை வாக இருந்தது.

இந்த நிலையில், 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன் னிட்டு, 75 நாட்களுக்கு 18-59 வயதி னருக்கு நாடு முழுவதும் அரசு மய் யங்களில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசு வழங்கியது. கடந்த 15ஆம் தேதிமுதல் இது நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாட்டில் சுமார் 3.5 கோடி பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடவேண்டி உள்ளது. 75 நாட் களுக்குள் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக, இந்த மாதத்தில் 2ஆவது முறையாக நேற்று முகாம் நடத்தப்படுள்ளது. 75 நாட் களுக்குள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசிபோடும் விதமாக கூடுதல் முகாம்கள் நடத்தப்படும்.

தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர் களுக்கு இன்று (ஜூலை 25) விடுமுறை அளிக்கப்படுகிறது. அத னால், இன்று (25.7.2022) வழக்க மான தடுப்பூசி மய்யங்கள் செயல் படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment