17 வயது நடந்து கொண்டிருக்கும் போதே வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க முன்கூட்டியே பதிவு செய்யலாம் என்ற புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று (28.7.2022) வெளியிட்டுள்ளது. இதன்படி, 17 வயது நடக்கும் போதே இளைஞர்கள் முன்கூட்டியே வாக்காளராக பதிவு செய்வதற்கான விண்ணப்பங் களைத் தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பங்களை உருவாக்கும்படி, அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் அது உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 18 வயதை அடைபவர்கள், வாக்காளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment