இந்தியாவில் 17.092 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

இந்தியாவில் 17.092 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுடில்லி, ஜூலை 2 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இந்தியாவில் 30.6.2022 அன்று தினசரி கரோனா பாதிப்பு அதிரடியாக 18 ஆயிரத்து 819 ஆக உயர்ந்தது. நேற்று இது சற்றே குறைந்தது. இதன்படி நேற்று 17 ஆயிரத்து 70 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை ஏறத்தாழ 1,750 குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 17,092 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 092 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,86,326 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,168 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 14,684 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,51,590 ஆக உயர்ந் துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு தற்போது 1,09,568 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,97,84,80,015 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,09,776 பேர்) கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


No comments:

Post a Comment