குடந்தை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
குடந்தை, ஜூலை 13 குடந்தை கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 9.7.2022 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் குடந்தை பெரியார் மாளிகையில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா. ஜெயக்குமார் தலை மையில் தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர்/பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார், மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் அஜிதன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் திரிபுரசுந்தரி ஆகியோரது முன்னிலையில் சிறப்பாக நடை பெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் நிம்மதி, மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன்,
மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன், துணை செயலாளர் தமிழ்மணி, மாவட்ட மகளி ரணி தலைவர் ஜெயமணி, மாவட்ட மகளிர் பாசறை ராணி, குடந்தை ஒன்றிய தலைவர் ஜில்ராஜ், ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், திருடுமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், திருநாகேஸ்வரம் குருமூர்த்தி, இளை ஞரணி தோழர்கள் அவினாஷ், வருண்குமார், அருண், தீனதயாளன், அருண்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு வருகை தந்தோரை மாநகர செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கலந் துரையாடல் கூட்டத்தில் பொதுக்குழு தீர் மானங்களை உடன் செயலாக்குதல், குடந்தை மாவட்ட இலக்காகிய 1,500 'விடுதலை' சந் தாக்களை சேர்த்தல், ஜூலை 30 அரியலூர் இளைஞரணி மாநாட்டு சுவரெழுத்து விளம்பரம், கடைவீதி பிரச்சார வசூல் ஆகியவை செய்திடல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment