புதுடில்லி, ஜூலை 31-இந்தியாவில் ஒரே ஆண்டில் சாலை விபத்துகளில் 1.31 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் கட்காரி தெரிவித்தார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ள முக்கிய தகவல்கள்:-
இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்து 48 ஆயிரத்து 279 பேர் காயம் அடைந்தனர். * 2019ஆம் ஆண்டில் நாட்டில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 2 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 361 பேர் காயம் அடைந்துள்ளனர்.
* கரோனா தொற்றால் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணிகள் தாமதமாகி உள்ளன. இந்த தாமதம் 3 முதல் 9 மாதங்கள் வரை ஏற்பட்டுள்ளது. * நாட்டில் 61 அரசு போக்குவரத்து நிறுவனங்கள், 1 லட்சத்து 45 ஆயிரத்து 747 பேருந்துகளை இயக்குகின்றன.
அவற்றில் 51 ஆயிரத்து 43 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்குமான வசதிகள் கொண்டவை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment