நெல்லை, ஜூலை 25- நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் 1 மற்றும் 2-ஆவது அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகள் மூலம் தினமும் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு சுமார் 500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் 2-ஆவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. அங்கு தற்போது 3 மற்றும் 4-ஆவது அணு உலைகளின் கட் டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில் சுமார் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் 5 மற்றும் 6-ஆவது அணு உலைகளுக்கான கட்டு மானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் அணு உலை களில் எரிந்த யுரேனியம் எரிகோல்களை மாற்றும் பணிகள் நடைபெறும். அதனை முன்னிட்டு அணு உலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்புப் பணிக்காக மின் உற்பத்தி நேற்று (24.7.2022) மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 நாட் களுக்கு பிறகு பணிகள் முடிவடைந்தபின் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந் துள்ளது.
No comments:
Post a Comment