வாசிப்புத்திறனை மேம்படுத்த புதிய திட்டம் தொடக்கம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

வாசிப்புத்திறனை மேம்படுத்த புதிய திட்டம் தொடக்கம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி, ஜூன் 3 வாசிப்புத் திறனை மேம்படுத்த "ரீடிங் மாரத்தான்" திட்டம் அமல் படுத்தப் பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 

திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தொடர் நிகழ்வாக மாணவர் களின் வாசிப்புத்திறனை மேம் படுத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை கூகுள் நிறுவனத்தின் வழியே "ரீடிங் மாரத்தான்" என்கிற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது. அதன்படி இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் தங்கள் அலைபேசியில் "கூகுள் ரீடு அலாங்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழியே எளிய முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 இதற்கான தொடக்க விழா பகவதிபுரம் நடுநிலைப் பள்ளி யில்  1.6.2022 அன்று நடை பெற் றது. புரிந்துணர்வு ஒப்பந்தம் இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு வாசிப்புத்திறன் தொடர் ஓட்டம் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளி தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை 

ஆகியோர் முன்னிலை வகித் தனர். 

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

குழந்தைகளுக்கு வாசிக்கின்ற திறனை அதிகப்படுத்த வேண் டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத் தலின் படி கூகுள் நிறுவனத் துடன் ஒரு மாதத்திற்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத் தியது. 

அதன் முக்கிய அம்சம் குழந்தைகளுக்கு வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த திட்டத்தை 1ஆம்  தேதி முதல் வரும் 12ஆம் தேதி வரை தொடர்ந்து நடத்த இருக்கிறோம்.  தமிழ்நாட்டில் 1 லட்சத்து 81 ஆயிரம் இல்லம் தேடிக்கல்வி மய்யங்கள் உள்ளன. 

இங்குள்ள தன்னார்வலர்கள் தங்களுடைய செல்போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து குழந்தைகளுக்கு தேவை யான வசதிகள் மற்றும் படிக்க செய்வார்கள். குழந்தைகளை படிக்கும்போது 100 வார்த் தைகள் கொண்ட சிறிய கதை முதல் 400 வார்த்தைகள் கொண்ட பெரிய கதை வரை படிக்க செய்வார்கள். 4 கட்ட மாக இதற்கு உரிய பயிற்சிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப் படும். 

அப்படி படிக்கும்போது செயற்கையான நுண்ணறிவு ஏற்படும். முழுமையாக படிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத் திற்கு முன்பாக படிக்க வேண்டும் என்பதற்காக கூகுள் வாசிப்பு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த செயலியின் பெயர் கூகுள் ரீடு அலாங் என்பதாகும். ஒவ் வொரு மாவட்டத்திலும் இல் லம் தேடிக்கல்வி தன்னார்வல தொண்டர்கள் மூலம் செய்ய வேண்டும் என்பதே எங்களது ஆசை. அதில் நாங்கள் ஈடு பட்டிருக்கிறோம். 

13ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளது. 

1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந் தைகளின் வாசிப்புத் திறனுக்காக கதை களோடு புகைப்படங்களும் இருப்பதால் படிப்பதற்கு அவர் களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளது. 

 12ஆம் தேதி வரை இந்த வாசிப்புத்திறன் பயிற்சி நடை பெறும். 

இவ்வாறு அவர் கூறினார். 

விழாவில், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண் டனர்.


No comments:

Post a Comment