தமிழனின் கெடுதலை போக்கும் விடுதலை நாளிதழ் வாங்கி படியுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

தமிழனின் கெடுதலை போக்கும் விடுதலை நாளிதழ் வாங்கி படியுங்கள்!

தமிழனின் கெடுதலை போக்கும் விடுதலை நாளிதழ் ஜூன் 1இல் 88ஆம் ஆண்டில் வெற்றி நடை போடுகிறது. தமிழர்களே தமிழர்களே உங்கள் சிந்த னையை தூண்டி, உங்களை சிந்திக்க வைக்கும் நாளிதழ்தான் விடுதலை! தமிழ் வாழத், தமிழ்நாடு வாழத், தன்மான இயக்கம் கண்ட தந்தை பெரியார் தொடங்கிய நாளேடுதான் விடுதலை!

தன்மானம் உள்ள தமிழனாக பகுத்தறிவு உள்ள பண்பாளனாக திராவிட மக்களை உருவாக்க தந்தை பெரியார் தொடங்கிய நாளேடு தான் விடுதலை! மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று மக்களுக்கு உணர்த்திட்ட மாபெரும் தலைவர் பெரியார் தொடங்கிய நாளேடு தான் விடுதலை! சுயமரியாதை கட்டுப்பாடு சமூகநோக்கு மனிதநேயம் ஆகிய இயல்புகள் திராவிட மக்களிடம் உருவாக தந்தை பெரியார் தொடங்கிய நாளேடுதான் விடுதலை! தாழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை தட்டி எழுப்பிட தத்துவ மேதை தந்தை பெரியார் தொடங்கிய நாளேடு தான் விடுதலை! தன்னலம் மறந்து தமிழ்சமுகத்திற்காக பொது நலத்தொண்டு செய்த தந்தை பெரியார் தொடங்கிய நாளேடுதான் விடுதலை! 

அச்சமும் மடமையும் அடிமை மனப்பான்மையும் ஆட்கொண்ட, திராவிட மக்களை திருத்திய தலைவர் பெரியார் தொடங்கிய நாளேடுதான் விடுதலை! சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்ற சுய சிந்தனையை தூண்டிய தலைவர் தந்தை பெரியார் பெரியார் தொடங்கிய நாளேடு தான் விடுதலை! சமுதாய இழிவு ஒழிய, ஜாதி மதம் அழிய, சமூக நீதி மலர பாடுபட்ட நம் தந்தை பெரியார் தொடங்கிய நாளேடு தான் விடுதலை!

பெண்ணடிமை சிந்தனையை ஒழித்து, பெண் உரிமை சிந்தனை வளர்க்க தந்தை பெரியார் தொடங் கிய நாளேடுதான் தான் விடுதலை! மக்களின் அறியா மையை பயன்படுத்தி சினிமா, கடவுள், மதம், சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளை பரப்பிடும் பத்திரிக் கைகள் மத்தியில், அறிவியல் சிந்தனையை தூண்டி பகுத்தறிவு கருத்துக்களை, பொது உடைமை சிந்தனை களை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரியார் தொடங் கிய நாளேடுதான் விடுதலை!

திராவிட தமிழனே வீரனாய் வீரவேந்தனாய் இருந்த நீ கோழையாய் பூனையைக் கண்டு அஞ்சும் பேதையாகி கிடக்கின்றாய் ஏன்? இப்படி நீ ஆனதின் அடிப்படையை உணரவில்லையே என்ற உங்களிடம் விளக்கமும் விழிப்பும் உண்டாக்கி வருகிற நாளேடு தான் விடுதலை! திராவிடத் தமிழனே நீ நான்காம் ஜாதியாய் கீழ் ஜாதியாய் ஆக்கப்பட்டுவிட்டாய் உழைத்தாலும் உழைப்பின் பயனை அடைய முடியாதபடி செய்யப்பட்டு விட்டாய் அரசியலிலே கல்வி நிலையிலே , பிறதுறைகளிலே கீழ்நிலை சிப்பந்தியாய் சீர்குலைக்கப்பட்டாயே அது ஏன்? என்பதை உணர்த்திட திராவிட மக்களை அறிவுத் துறையிலும் வாழ்க்கைத்துறையிலும் விழிப்புணர்வு பெறும்படி செய்திட தொடர்ந்து பணிசெய்து வருவது தான் நம் விடுதலை!

வைரம் ஜொலிக்க வேண்டுமானால் சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டு மானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும்... ஆம் அதுபோலத்தான் மக்கள் நல்வாழ்வு பெற வேண்டு மானால் பகுத்தறிவு பாதையில் செல்லத்தான் வேண் டும். பகுத்தறிவை பரப்பிட தந்தை பெரியார் தொடங் கிய நாளிதழ்தான் விடுதலை  என்றார் அறிஞர் அண்னா!

விடுதலை வாங்குங்கள்! மூடநம்பிக்கைகளால் உங்களுக்கு ஏற்படும் கெடுதலை போக்கும் விடுதலை நாளிதழ் வாங்கிப்படியுங்கள்.

பகுத்தறிவு சிந்தனையை பரப்பிடுங்கள் ஓராண்டு சந்தா ரூ.2,000, அரையாண்டு சந்தா ரூ.1,000 மட்டுமே.

சமுதாய மாற்றத்திற்கான ஒருவாழ்வியல் 

'உண்மை' மாத இருமுறை இதழ்! ஆண்டு சந்தா ரூ.350 .

தன்னம்பிக்கையோடு உங்கள் குழந்தைகள் வளர உங்கள் குழந்தைகளின் சிந்தனையை தூண்டும் இதழ்தான் பெரியார் பிஞ்சு மாதஇதழ்! ஆண்டு சந்தா ரூ.240 மட்டுமே..

தந்தை பெரியாரின் கொள்கைகளை அவர் போட்டுத்தந்த பாதையில் மக்களிடம் கொண்டு சேர்க் கும் பணியில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பணிசெய்வோம் வாரீர் ! வாரீர் !

இயக்க தொடர்பான செய்திகள் பெறவும், வீடு தேடி விடுதலை வரவும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா. புரட்சியாளர் அம்பேத்கர், டாக்டர் கலை ஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகி யோர் எழுதிய புத்தகங்கள் பெற தொடர்பு கொள்ள வும்! அலைபேசி : 97867 76244 .

-அ.மு.ராஜா, 

பெரியார் புத்தக நிலையம், 

ஜிடி நாயுடு நினைவு-பெரியார் படிப்பகம்

பழைய அஞ்சல் நிலையம் சாலை,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 

கோவை 


No comments:

Post a Comment