கோவை, ஜூன் 29 கோவை மாவட்ட கழக இளைஞரணி- மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26.06. 2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சுந்தராபுரம் காமராஜநகர் கண் ணப்பன் அரங்கில் மாவட்ட இளைஞரணி தலைவர் ச.திராவிடமணி தலைமையில் நடைபெற்றது.
மண்டல மாணவர் கழக செயலாளர் வெ. யாழினி வரவேற்புரையாற்றினார் மாவட்ட இளைஞரணி செயலாளர் கணபதி தமிழ்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொள்ளாச்சி கார்த்திக், மண்டல இளைஞரணி செயலாளர் முனீஸ்வரன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் செ. மதியரசு, மாவட்ட மாணவர் கழக செயலாளர் தா.க. கவுதமன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ரா.வின் சென்ட், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ஞா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி அமைப்பாளர் வெள்ளலூர் ஆ.பிரபாகரன் தொடக்கவுரையாற்ற மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா. கமல் குமார் மற்றும் மாநில மாணவர் கழக செயலாளர் மு. ராகுலன் நோக்கவுரையாற்றினர்.
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் சிறப்புரையாற்றினார் அப்போது, ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மாநில இளைஞரணி - மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது குறித்தும். மதுரை பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது பற்றியும் இளைஞரணி மாநில மாநாடு, விடுதலைச் சந்தா, இயக்க செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் தி.க செந்தில்நாதன், மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மாநகர தலைவர் புலியகுளம் கா.வீரமணி, மாநகர செயலாளர் இரா.பிரபு ஆகியோர் வழிகாட்டுதல் உரை வழங்கினர். இந்நிகழ்வில் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர் இறுதியாக ஞா.தமிழ்செல்வன் நன்றியுரை கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1:கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகரின் தந்தையார் மருதாசலம் மற்றும் மண்டல மாணவர் கழக செயலாளர் வெ.யாழினியின் தாயார் ராஜேஸ்வரி ஆகியோர் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2:
ஏப்ரல் 30, மே 1 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இளைஞரணி, மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் மற்றும் 25. 05.2022 அன்று மதுரையில் நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என இக்கூட்டம் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 3:
ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டிற்கு கோவை மாவட்டத்திலிருந்து தனிப் பேருந்தில் பங்கேற்பது எனவும் இளைஞரணி சீருடை அணிவகுப்பில் பெருமளவில் இளைஞர்களை பங்கேற்கச் செய்வது எனவும் பெரியார் சமூக காப்பணிக்கு பயிற்சிக்கு இளைஞரணி மாணவர் கழக தோழர்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அய்ந்து நபர்களை அனுப்புவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 4:
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று அறுபதாவது ஆண்டு மகிழ்வாக 60 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் வழங்குவதென மதுரை பொதுக் குழுவின் முடிவை ஏற்று கோவை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 150 நபர்கள் 10 சந்தா வீதம் 1,500 'விடுதலை' சந்தாக்கள் திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி மகிழ்வோம் என முடிவு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment