மேகதாது அணை - தமிழ்நாடு அரசு உரிமையை நிலைநாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

மேகதாது அணை - தமிழ்நாடு அரசு உரிமையை நிலைநாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

வேலூர்,ஜூன்.30 மேகதாது அணை விவகாரத்தில் தனது உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என்று வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 29.06.2022 அன்று நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முடிவற்ற திட்டப்பணிகள், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், பல்வேறு துறைகள் வாரியாக நலத் திட்ட உதவிகள் வழங்குதல் என மொத் தம் ரூ.455 கோடியே 82 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது.  வேலூர் வீரத்தின் அடையாளம். விவேகத்தின் அடையா ளம். விடுதலை, நல்லிணக்கம் மற்றும் போர்க்களத்தின் அடையாளமாக திகழ்கிறது. வரலாற்று சிறப்புமிக்க வேலூரில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட் டத்தின் அமைச்சரும் கழக பொதுச் செயலாளரு மான துரைமுருகனை கலைஞர் மற்றும் பேராசிரியர் இடத்தில் வைத்து பார்க்கிறேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் பாடுபடும் அரசாக தி.மு.க. திகழ்கிறது. அதுதான் ’திராவிட மாடல் அரசு. இந்த மாடல் ஆட்சிதான் இந்தியா முழுவதும் வழிகாட்டும் அரசாக திகழ்கிறது. இந்த தருணத்தில்’ வேலூரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு அனைத்து தரப்பினரையும் பாராட்டு கிறேன். 10 ஆண்டுகால ஆட்சியில் செய்யாததை நாங்கள் இந்த ஓராண்டு கால ஆட்சியில் செய்துள்ளோம், என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன்.

இந்தியாவில் அனைத்து மாநிலங் களும் அண்ணாந்து பார்க்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டை வைத்துள் ளோம். பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்தபோது அவரது முன்னி லையில் ஒன்றிய அரசு தமிழ்நாடு வளர்ச்சிக்கு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறியிருந்தேன்.எந்த சமரசத்துக்கும் இடம் இல்லாமல் போராடும் அரசாக தி.மு.க. இருக்கும். 

மேகதாது அணை

மேகதாது அணை விவகாரத்தில் தனது உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும். தமிழ்நாட்டின் உயிர் நாடி பிரச்சினையில் காவிரி பிரச் சினையும் ஒன்று. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரில் முழு உரிமை உள்ளது. காவிரியின் குறுக்கே கருநாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட திட் டமிட்டு வருகிறது. அதை தொடக்கம் முதலே தடுத்து எதிர்த்து வருகிறோம். 

ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கருநாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்து நிதி ஒதுக்குவது, சட்டம் போடுவது, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தருவது என செயல்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் நாமும் அதற்கு தடுப்பணை போட்டு வருகிறோம். 2 வாரங்களுக்கு முன் கருநாடக அரசு அதிகமான நாட்டம் காட்டியது. காவிரி ஆணையத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என கூறியபோது இது தொடர்பாக நான் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். கருநாடக  முதலமைச்சர் இதுதொடர்பாக டில்லி சென்ற நிலையில் நமது நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவும் ஒன்றிய அமைச்சரை  சந்தித்து பேசி னார்கள். 

2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் காவிரி நீர் தொடர்புடைய அரசு மற்றும் ஒன்றிய அரசின் அனுமதியின்றி அணை கட்ட கூடாது என்று கூறியுள்ளது. ஆகவே கருநாடக அரசின் முடிவானது உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானது. எனவே கருநாடக அரசுக்கு மேக தாதுவில் அணைகட்ட ஒன்றிய அரசு எந்தவித தொழில் நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment