வீட்டுத் தரை, தொழிற்சாலைத் தளம் என்று சுத்திகரிப்பதற்கு ரோபோக்களை பயன்படுத்துவதில் முன்னோடி டைசன் நிறுவனம். இது விரைவில், வீட்டு வேலைகளைச் செய்யும் ரோபோக்களை சந்தைக்குக் கொண்டுவரவிருக்கிறது.
அண்மையில் டைசன் வெளியிட்டுள்ள காணொலியில், ஒரு ரோபோ, தரையில் கிடக்கும் பொம்மைகளை தன் கை விரல்களால் எடுக்கிறது. பாத்திரங்களை உலர்த்தி அடுக்குகிறது. இருக்கை மீதுள்ள தூசியை 'வாக்குவம் கிளீன்' செய்வதுபோல உறிஞ்சுகிறது.
ரோபோவியலில் கடந்த 20 ஆண்டுகளாக டைசன் ஆராய்ந்து வருகிறது. இதனால் அது தரை துடைக்கும் வட்டவடிவ ரோபோவோடு நிற்கவில்லை. அடுத்து, வீட்டுக்குள் நடமாடி, கைநீட்டி, வேலைகளைச் செய்யும் அசல் ரோபோக்களை டைசன் சோதித்து வருகிறது.
டைசன் நிறுவனம், 2000த்தில் துவங்கி தற்போது வரை 250 ரோபோ வல்லுநர்களை தனது சிங்கப்பூர் மற்றும் பிரிட்டன் மய்யங்களில் பணிக்கு சேர்த்துள்ளது. விரைவில் ரோபோ துறையின் 750 மிகச் சிறந்த மூளைகளை வேலைக்கு அமர்த்தவுள்ளது.
இதன் மூலம், வருங்கால வீட்டு ரோபோக்கள் மற்றும் தனி நபர் உதவி ரோபோக்கள் சந்தையில் முன்னணி இடம் பிடிக்க டைசன் திட்டமிடுகிறது.
No comments:
Post a Comment