நாடோடி மக்கள் பேசும் மொழிகளை விடக் குறைவாகப் பேசப்படும் மொழி சமஸ்கிருதம் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக்கொள்ளும் புள்ளிவிவரம் இதோ:
இந்திய மொழிகளில் இந்தியை 52,83,47,193 பேரும், சமஸ் கிருதத்தை 24,821 பேரும் பேசுகின்றனர் என்கிறது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு. புள்ளி விவரங்களின் படி. மைதிலி மொழியை 1,35,83,464 பேரும், சந்தாலி மொழியை 73,68,192 பேரும் பேசுகின்றனர்.
இங்கு இந்தி என்பது மக்கி, போஜ்பூரி, கான்பூரி, பனாரசி, அரியான்வி மற்றும் பல வட இந்திய வட்டார மொழிகள் (இவைகளுக்கு பெயர் இல்லாத அல்லது மறைக்கப்பட்ட) போன்ற வற்றைச் சேர்த்து இந்தி மொழி பேசு பவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். எடுத்துக் காட்டாக கரிபோலி மொழி மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் நகரங்களைத் தவிர்த்து கிராமங்கள் மற்றும் சிற்றூர் களில் அதிகம் பேசும் மொழி ஆகும். ஆனால், இதையும் இந்தி என்று குறிப்பிட்டுள் ளனர். (ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை).
மிகக் குறைந்த மக்களால் பேசப்படும் மொழி
சமஸ்கிருதம்தான், இந்தியாவில், பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் மிகக் குறைந்த மக்களால் பேசப்படும் மொழி என தெரியவந்துள்ளது.
அதன்படி
இந்தி 52,83,47,193 (43.63%) (இதில் பல பிரிவுகள் உண்டு
பெங்காலி 9,72,37, 669 (8.30%)
மராத்தி 8,30,36,680 (7.09%)
தெலுங்கு 8,11, 27,740 (6.93%)
தமிழ் 6,90, 26, 881(5,89%)
குஜராத்தி 5,54,92,554 (4.74%)
உருது 5,07,72,631 (4.34%)
கன்னடம் 4,37,06,512 (3.73%)
ஒடியா 3,75,21,324 (3.20%)
மலையாளம் 3,48,38,819 (2..97%)
பஞ்சாபி 3,31, 24,726 (2.83%)
அசாமி 1, 53,11,351 (1.31%)
மைதிலி 1,35,83,464 (1.16%)
சந்தாலி 73,68,192 (0.65%)
காஷ்மீரி 67,97,587 (0.58%)
நேபாளி 29,26,168 (0.25%)
சிந்தி 27,72,264 (0.24%)
டோக்ரி 25,96,767 (0.22%)
கொங்கனி 22.,56,502 (0.19%)
மணிப்பூரி 17,61,079 (0.15%)
போடோ 14,82,929 (0.13%)
சமஸ்கிருதம் 24,821
No comments:
Post a Comment