விதைகளை தூய்மைப்படுத்தும் எலெக்ட்ரான்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

விதைகளை தூய்மைப்படுத்தும் எலெக்ட்ரான்கள்

கிடங்கிலிருக்கும்போதே விதைகளின் மேல் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் குடியேறிவிடுகின்றன. 

இதனால், விளைச்சல் குறையக்கூடாது என்று, விவசாயிகள் பயிரிடுவதற்கு முன் விதைகளுக்கு கிருமிக் கொல்லிகளை தெளிப்பர். இக்கிருமிக் கொல்லிகள் பயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பவை. எனவே தான் ஜெர்மனியிலுள்ள 'பிரான்ஹோபர் இன்ஸ்டிடியூட்'டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், விதைகள் மீது எலெட்ரான்களைப் பாய்ச்சும் முறையை உருவாக்கியுள்ளனர். 

இதனால் விதைத் தோல் மீதுள்ள சகல ஒட்டுண்ணிகளும் செயலற்றுப்போகின்றன. ஆனால், தோலுக்குள்ளே உள்ள விதையின் மற்ற எதுவும் பாதிக்கப்படுவதில்லை.

ஜெர்மனியிலுள்ள விவசாயத் தொழில் அமைப்பான இ - விட்டா  (E - Vita) மூலம் உருவாக்கப்பட்ட எலெட்க்ரான் விதை பதப்படுத்தும் இயந்திரம், ஒரு லாரி கன்டெய்னர் அளவுக்கே உள்ளது. 

எனவே, இதை விவசாயிகளின் விதைக் கிடங்கிற்கே கொண்டுபோய் பதப்படுத்தலாம். ஒரு மணி நேரத்திற்கு 18 டன் விதை

களைப் பதப்படுத்தலாம். அதே நேரத்தில் விதை மீது ஊட்டச் சத்துக்களையும் தெளிக்க முடியும். 


No comments:

Post a Comment