உசிலம்பட்டியில் மகளிர் கல்லூரி தொடங்க தமிழ்நாடு அரசிடம் உரிய முறையில் ஆவன செய்வோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

உசிலம்பட்டியில் மகளிர் கல்லூரி தொடங்க தமிழ்நாடு அரசிடம் உரிய முறையில் ஆவன செய்வோம்!

உசிலம்பட்டி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உறுதி

ஜூன் 9 உசிலம்பட்டியில் மகளிர் கல்லூரி தொடங்க  தமிழ்நாடு அரசிடம் உரிய முறையில் ஆவன செய்வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நேற்று (8.6.2022) மாலை நடைபெற்ற மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு நகர தலைவர் உசிலம்பட்டி அ.பவுன்ராசா தலைமை வகித்தார். மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர் மன்னன் வரவேற்புரை வழங்கினார்.

மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் த.எரிமலை, மண்டல தலைவர் க.சிவகுருநாதன், மாவட்ட அமைப்பாளர் கணேசன், மாவட்ட துணைத் தலைவர் சிங்கராசு, மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துக்கருப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலா, தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர் தே.எடிசன்ராசா, மாவட்ட ப.க.அமைப்பாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை புறநகர் மாவட்ட தலைவர் வாடிப்பட்டி தனபாலன் தொடக்கவுரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் விளக்க உரையாற்றினார். 

தமிழர் தலைவர் சிறப்புரை

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், இந்தப் பகுதியில் நீண்ட நாள் களுக்குப் பிறகு வந்து பேசுகிறோம் என்றால் இப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம். கடந்த மாதம் நீட் தேர்வு ரத்து செய்ய மேற்கொண்ட நீண்ட பயணத்தின்போது தோழர் கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வந்திருக்கிறோம்.

அதேவேளையில் இங்கே படங்களாக காட்சி தருகிற நமது பொதுவுடைமை இயக்க தலைவர் எங்களுக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்து மறைந்த அருமை தோழர் தா.பாண்டியன், அதேபோல நமது அய்யனார் குளம் மா.பவுன் ராசா அவர்கள். அவர் நம்மை சந்திக்கும் போதெல்லாம் 'விடுதலை' சந்தாவுடன்தான் சந்திப்பார். இப்பகுதியில் ஏராள மான இளைஞர்களை, மாணவர்களை இந்த இயக்கத்தில் இணைத்து பணியாற்றிய அற்புதமான தோழர். இவர்கள் மறையவில்லை நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். அவர்களது தொண்டுக்கு மரியாதை செலுத்துகிறோம். இந்த இயக்கம் என்பது எல்லோர் வீட்டிலும் இருக்கும்.

கத்தியின்றி, இரத்தமின்றி அமைதிப் புரட்சியை ஏற்படுத் திய இயக்கம் திராவிடர் கழகம். பெண்களை பத்திரமாக வைத்திருந்தது அந்தக் காலம். ஆனால், பத்திரம் எழுதும் பணியில் ஏராளமான பெண்கள் இருப்பது இந்தக் காலம். எல்லோரையும் ''படி, படி, படி'' என்று சொல்வது தான் திரா விடம். யாருக்கும் படிக்க உரிமை இல்லை என்று சொல்வது தான் ஆரியம். உசிலம்பட்டியில் மகளிர் கல்லூரி தொடங்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். உங்களது கோரிக்கையினை நிறைவேற்ற ஆவன செய்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். - இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் தனது உரையில் கூறினார். (முழு உரை பின்னர்).

இந்த பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், ப.க. எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு, மாநில மாணவர் கழக அமைப்பாளர் 

இரா.செந்தூரபாண்டி, வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மாவாசி, ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் கே.பி.ஜெயராமன், ம.தி.மு.க.நகர செயலாளர் குமார், சி.பி.அய். ஒன்றிய செயலாளர் ராமர், ஏ.அய்.டி.யூ.சி. மண்டல துணை தலைவர் ஜீவா, சமூக சிந்தனையாளர் அய்.பாலசுப்பிர மணி யம், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட தலைவர் ராஜா, வி.சி.க. மாநில துணை செயலாளர் தென்னரசு, மதுரை மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம், மதுரை மண்டல செயலாளர் முருகேசன், கழக காப்பாளர் முனியசாமி, மற்றும் கழக தோழர்கள் பெரியசாமி, சந்திரன், அய்யாத்துரை, பாண் டியன், தமிழ்ப் பாண்டியன், சுந்தர்ராஜன், பொன்னையா, இன்பம், சசிக்குமார், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

முடிவில் கவிஞர் வேல்முருகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment