திருச்சி மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்திற்கு தனி வாகனத்தில் செல்ல தயாராகும் தருமபுரி மாவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

திருச்சி மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்திற்கு தனி வாகனத்தில் செல்ல தயாராகும் தருமபுரி மாவட்டம்

தருமபுரி, ஜூன் 11- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக மகளி ரணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 7.6.2022 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில்,தருமபுரி மாவட்ட செயலாளர் யாழ் திலீபனின் சிறப்பான ஒருங்கிணைப் போடு  மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கா. கவிதா  தலைமையில் நடைபெற்றது. தோழர் அறிவுமதி  வரவேற்புரையாற்றினார்.

12 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில மகளி ரணி கலந்துரையாடல் கூட்டத்தில் 25 மகளிர் தோழர்க ளோடு தருமபுரி மாவட்டம் சார்பில் தனி பேருந்தில் கலந்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டு, மாவட்ட - மாநில பொறுப்பாளர்கள் நிதி உதவியோடு பேருந்துக்கு முன் தொகை தரப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. 

மேலும் 11 ஆம் தேதி இரவு தருமபுரி பெரியார் மன்றத் தில்  இருந்து இரவு 10 மணிக்கு  பேருந்து புறப்படும் எனவும், மகளிரணி தோழர்கள் தங்களின் வருகைக்கு தோழர் தமிழ்செல்வி அவர்களை 94861 01676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும் முடிவெடுக்கப் பட்டது. 

வாகன ஏற்பாட்டிற்கான பங்களிப்பை செய்த அன்புத் தோழர்கள் 

அரூர்  சா. ராஜேந்திரன் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் 3000, ஊமை ஜெயராமன் மாநில அமைப்புச் செயலாளர் 3000, மு.பரமசிவம் மாவட்ட தலைவர் 1000, புலவர் இரா.வேட்ராயன் மாவட்ட துணைத்தலைவர்  1000, கே.ஆர்.குமார் 1000, அ.தமிழ்ச்செல்வன் 500, இரா கிருஷ் ணமூர்த்தி மண்டல பகுத்தறிவு  ஆசிரியர் அணி செயலா ளர்  1000, சகுந்தலா அர்ஜுனன் 500.

நிகழ்ச்சியில் மகளிர் தோழர்கள் மஞ்சு சேட்டு, அருணா பீமன், சகுந்தலா அர்ஜுனன், பூங்கோதை, ஊமை அர்ஜுனன், பிரபாகரன், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் ஊமை ஜெயராமன், சா. ராஜேந்திரன், மு.பரமசிவம், யாழ்திலீபன், மா.செல்லதுரை, பூபதி ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

நன்கொடை பங்களிப்பு செய்த தோழர்களுக்கு மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி  காணொலி வாயிலாக நன்றி தெரிவித்தார்.  இறுதியாக மகளிர் பாசறை மேனாள் செயலாளர் சங்கீதா  நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment