மும்பை, ஜூன்.2 இந்தியாவில் இருந்து வந்த கோதுமையில் ரூபெல்லா வைரஸ் உள்ளதாகக் கூறி துருக்கி திருப்பி அனுப்பி உள்ளது.
இந்தியாவில் கோதுமையின் விலை உயர்ந்து வருவதால், அதன் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஒன் றிய அரசு சமீபத்தில் தடை விதித்தது. ஆயினும் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து கோதுமையை அனுப்பி வருகிறது.
அவ்வகையில் துருக்கி நாட்டுக்கு இந்தியக் கோதுமை ஏற்றுமதி செய் யப்பட்டது. இந்தியக் கோதுமையில் பைட்டோசானிட்டரி இருப்பதாகவும், ரூபெல்லா வைரஸ் தொற்று இருப் பதாகவும் கூறி இந்தியாவிற்கே திருப்பி அனுப்ப துருக்கி அரசு உத்தரவிட் டுள்ளது.
No comments:
Post a Comment