நகர்ப்புறங்களில் தூய்மைப் பணி இயக்கம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

நகர்ப்புறங்களில் தூய்மைப் பணி இயக்கம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 4 நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தையும், சென்னையில் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாமையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோ சனையின்படி, 2022-_2023ஆ-ம் ஆண்டுக்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு நகரங் களில் பெருமளவிலான மக் கள் பங்கேற்புடன், ஒவ் வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக் கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப் புணர்வு முகாம்கள் நடத்த 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' தொடங்கப் படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட் பட்ட ராயபுரம் மண்டலம், தங்கசாலை மேம்பால பூங்கா அருகில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.6.2022)  'நகரங்களின் தூய் மைக்கான மக்கள் இயக்கம்' - தீவிர தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார்.  அத னைத் தொடர்ந்து, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாணவ, மாணவியர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதி மொழியை ஏற்றனர்.   இதை யடுத்து பசுமை யான சுற் றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கசாலை மேம் பாலத்துக்கு கீழ் உள்ள இடத் தில் நகர்ப்புற அடர்வனம் அமைப்பதை தொடங்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டார்.

 பின்னர், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்  தீவிர தூய்மைப் பணி மற்றும் இல்லங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து தூய் மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்த விழிப் புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாணவ மாணவியர் களுடன் பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், பாஷ்யகாரலு தெருவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு நடந்து சென்று விழிப்புணர்வு துண்டுப் பிர சுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' - தீவிர தூய்மைப் பணியை தொடங்கி வைத்த அதேநேரத்தில், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பி டங்கள் உள்ள அமைவிடங் களில் சம்பந்தப்பட்ட உள் ளாட்சிப் பிரதிநிதிகள் மாநக ராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு, மாநகராட்சி மேயர்   பிரியா ராஜன், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவதாஸ்மீனா, நகராட்சி தலைவர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment