மகாராட்டிர அரசியலில் திடீர் திருப்பம் ஆளுநர் அதிரடி உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

மகாராட்டிர அரசியலில் திடீர் திருப்பம் ஆளுநர் அதிரடி உத்தரவு

மும்பை, ஜூன் 29 மகாராட்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கொஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

மகாராட்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நாளை (30.6.2022) மாலை 5 மணிக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம் மாநில ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

மகாராட்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை ஆகிய கட்சிகளின் 'மகா விகாஷ் அகாடி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி வகிக்கிறார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரும் உள்ளனர்.

இந்தநிலையில், மகாராட்டி ராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் எனக் கோரி, சிவசேனை மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலை மையிலான 38-க்கும் மேற்பட்ட அதிருப்தி சட்டமன்ற உறுப்பி னர்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். 

இதையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என அம்மாநில ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரியிடம் பாஜக மூத்த தலைவரும் மேனாள் முதலமைச் சருமான தேவந்திர பட்னாவிஸ் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மனு அளித்தார். இதனால் மகாராட் டிராவில் ஆளும் சிவசேனை கூட்டணி அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிவசேனைக்கு ஆதரவளித்து, தற்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் அஸ்ஸாமில் முகாமிட்டுள்ள சுயேச்சை சட்டமன்ற உறுப்பி னர்கள் சிலரும் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர்.

இதன் அடிப்படையில் முதல மைச்சர் உத்தவ் தாக்கரே நாளை மாலை 5 மணிக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கொஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நம்பிக்கை வாக் கெடுப்புக்காக மகாராட்டிர சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மகாராட்டி ராவில் புதிய ஆட்சி அமைக்க பா.ஜ.கவும் காய் நகர்த்தி வருகிறது. முன்னதாக மகாராட்டிரா மேனாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னா விஸ் திங்கட்கிழமை திடீரென டில்லி சென்றார். பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவுடன் அவர் தீவிர ஆலோ சனை நடத்தினார். சிவசேனை அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சி அமைப்ப தற்கான ஆலோசனை நடைபெற்ற தாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment