டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆதாரை நிர்வகிக்கும் உதய் அமைப்பு, “"தனியார் அமைப்புகள், ஓட்டல்கள், நிறுவனங்கள், இதர அமைப்பு களுக்கு ஆதார் நகலைக் கொடுக்காதீர்கள். அது தவறாகப் பயன்படுத்தப்படலாம்'” என அறிவிப்பு வெளியிட, ஒரே நாளில் ஒன்றிய அரசு அந்த அறிவிப்பை திரும் பப் பெற, மக்களிடையே குழப்பம் அதிகரித்திருக்கிறது. இது குறித்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெளி வான சட்டம் கொண்டு வந்து மக்களின் தகவல் பாதுகாக் கப்பட உறுதி செய்ய வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* தேசிய கல்விக் கொள்கை குறித்து ஒன்றிய அரசு குஜராத்தில் ஏற்பாடு செய்த ஒரு நாள் மாநாட்டை தமிழ் நாடு அரசு புறக்கணித்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு ஆபத்து என்றும், பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை மக்களுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி சி.பொன்னையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தி இந்து:
* ஜாதிவாரி கணக்கெடுப்பை பீகார் மாநிலத்தில் மேற்கொள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment