சேலம், ஜூன் 11- விழுப்புரம் மாவட்ட கழக அமைப்பாளர் சே.வ.கோபண்ணா -வெ.கீதா இணையரின் மகள் இலக் கியா, சேலம் மாவட்டம், தாடிக் காரனூர் கு. சுப்ரமணி-பழனியம் மாள் இணையரின் மகன் வினோத் குமார் ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் 9.6.2022 வியாழக்கிழமை காலை 9 மணியளவில் மிகச்சிறப்பான வகை யில் ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது.
மூத்த பெரியவர்கள் செங்கோ டன் மற்றும் தாடிக்காரனூர் வெங் கடாசலம் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மணமகளின் தந்தை கோபண்ணா இணையேற்பு விழா விற்கு வருகை புரிந்த அனைவ ரையும் மகிழ்ச்சியோடு வரவேற்று உரையாற்றினார்.
மேட்டூர் மாவட்ட கழக செயலாளர் கா.நா.பாலு வாழ்க்கை இணையேற்பு உறுதிமொழி கூற மணமக்கள் இருவரும் திரும்ப அந்த உறுதிமொழிகளை கூறி தங்கள் இணையருக்கு மாலை மாற்றி தங்களது வாழ்விணையராக ஏற்றுக்கொண்டனர்.
சேலம் மாவட்ட தலைவர் கே.ஜவ கர், மாநகர செயலாளர் பா.வைரம், மாவட்ட அமைப்பாளர் ச.வெ.இரா வணபூபதி, எடப்பாடி அன்புமதி, மாவட்ட செயலாளர் அ.ச. இள வழகன், சேலம் மாநகராட்சி திமுக மேனாள் எதிர்கட்சி தலைவரும், மகளிர் சுயமரியாதை அறக்கட் டளை நிறுவனருமான புவனேசு வரி, விழுப்புரம் மாவட்ட ப.க தலைவர் வே.இரகுநாதன், விழுப்பு ரம் மாவட்ட துணை செயலாளர் எ.இரமேசு, செஞ்சி நகர தலைவர் சு. அண்ணாமலை ஆகியோர் மண மக்களை வாழ்த்தி சுயமரியாதை திருமண வரலாறு குறித்தும், அதற் காக பெரியார் செய்த புரட்சி களையும் மற்றும் திராவிடர் கழக கொள்கைகளையும் எடுத்து சொல்லி உரையாற்றினர். ப.சரவ ணன் மற்றும் உறவினர்களும், நண் பர்களும் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர். மருத்துவர் சு. கல்பனா இணையேற்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இரு இல்லத்தாரின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
No comments:
Post a Comment