திருச்சி, ஜூன் 3 திருச்சி ஹர்ஷ மித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம் உலக புகையிலையில்லா விழிப்புணர்வு நாள் (31.05.2022) அன்று புகை யிலை ஒழிப்பு வாகனப் பிரச்சாரத் தினை துவக்கி வைத்து சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வித மாக மரக் கன்றுகளை வழங்கி ,புற்றுநோய் குறித்த விழிப்புணர் வினை பொது மக்களுக்கு வழங் கியது.
இந்நிகழ்ச்சியில் உலக புகையிலையில்லா நாளின் மய்யக்கருத்தான புகையிலையை ஒழிப்போம் சுற்றுச் சூழலை பாதுகாப்போம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தா மரை, திருச்சிராப்பள்ளி மாநக ராட்சி மேயர் மு. அன்பழகன் அவர் களுக்கு மரக்கன்றினை வழங்கி சிறப்பித்தார். மேலும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 100 மரக் கன்றுகளை ஹர்ஷமித்ரா புற்று நோய் மருத்துவமனையின் இவ் விழிப்புணர்வு நிகழ்விற்கு வழங்கிய துடன் வாகனப் பிரச்சாரத்தின் விழிப்புணர்வில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அ. ஜெய லட்சுமி, பேராசிரியர் ச. இராஜேஷ் மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட மாண வர்கள் கலந்து கொண்டு சமுதாயப் பணியாற்றினர் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment