கரோனா அதிகரிப்புக்கு காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

கரோனா அதிகரிப்புக்கு காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

சென்னை, ஜூன் 2   தமிழ் நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரு வதால், தனிமனித இடை வெளி, முகக்கவசம் அணி வது போன்ற விதிமுறை களை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் அறிவுறுத்தி யுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றின் 4ஆவது அலை ஜூன் மாதம் தொடங்குவ தற்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலை யில், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெ ரிக்கா, இஸ்ரேல் உள் ளிட்ட பல்வேறு நாடுகளி லும், டில்லி, அரியானா, உத்தர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிக ரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் தின சரி  தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21 வரை குறைந்திருந்தது. தற் போது 100-அய் கடந்துள் ளது. நேற்று புதிதாக 139 பேருக்கு தொற்று கண் டறியப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலும் குழுகுழு வாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகி றது. மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளதை போல் தொற்றின் 4ஆவது அலை தொடங்கியுள் ளதா என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற் பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் நேற்று (1.6.2022) கூறிய தாவது:

தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களாக கரோனா பாதிப்பு குறைந்த நிலை யில் உள்ளது. தற்போது அண்ணா பல்கலைக்கழ கம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பாதிப்பு கண்டறியப்படுவதால், தொற்று அதிகரித்துள் ளது. டில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், மகா ராட்டிரா, மத்திய பிரதே சம், கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரு கிறது.

வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர் களால், இங்குள்ள கல்வி நிறுவனங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள் ளது. ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடக் கூடாது என்று சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள் ளது. தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள மாணவர் களுக்கு லேசான அறிகுறி கள் மட்டுமே உள்ளன. அதனால் மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்.

மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற் பட்டுள்ளதால், அவர் களை வீடுகளில் இருக்கச் சொல்லவோ, கல்வி நிறு வனங்களுக்கு விடுமுறை அளிக்கவோ கூடாது. இந்த தொற்றை எளிதாக கட்டுப்படுத்திவிட முடி யும்.

தொற்று பாதித்த மாணவர்களின் மாதிரி கள், மரபணு ஆய்வகத் துக்கு அனுப்பப்பட்டுள் ளன. ஓரிரு நாளில் பரி சோதனை முடிவுகள் வந்துவிடும். இதுவரை எடுக்கப்பட்ட மாதிரி களின் பரிசோதனையில் அனைவருக்கும் பிஏ2 வகை கரோனா வைரஸ் பாதிப்பு என்பது உறுதி யாகியுள்ளது. ஒருவருக்கு மட்டும் பிஏ3 வகை கரோனா வைரஸ் இருந் தது. அவரும் குணம டைந்து விட்டார்.

பாதிப்பு லேசாக இருந்தாலும், தொற்று வேகமாகப் பரவுகிறது. அதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை கடை பிடிப்பது, முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற விதிமுறைகளை அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத 1.45 கோடி பேர் விரை வாக தடுப்பூசியை போட் டுக்கொள்ள வேண்டும். வரும் 12ஆம் தேதி தமிழ் நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள் ளது. இவ்வாறு அமைச் சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment