சென்னை, ஜூன்4 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி, அம்மாத இறுதி யில் நிறைவு பெற்றது.
நடைபெற்று முடிந்த 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாண வர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கள் தொடங்கியுள்ளது. சுமார் 60 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கரோனாதொற்றுக்கு பிறகு பொதுத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வதாலும், நேரடி வகுப்புகளுக்கான வாய்ப்பு குறைந்த அளவே மாணவர்களுக்கு கிடைத்ததாலும் மாணவர்களின் விடைத்தாளை திருத்துவதில் கண்டிப்பை காட்ட வேண்டாம் என்று கூறப்பட்டு இருப்பதாகவும், விடைக்கு பதில் அளிக்க முயற்சித்திருந்தாலோ, ஓரளவுக்கு விடை எழுதியிருந்தாலோ மதிப்பெண் வழங்க அறிவுறுத்தப் பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கையோ, செய்திக் குறிப்போவெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வைத்துப் பார்க்கும்போது, இந்த ஆண்டு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment