நியூயார்க், ஜூன் 1- ஈரான் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட 13 மடங்கு அதிகமாக செறிவூட்டப் பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருப்பதாக அய்.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு குழுவான பன்னாட்டு அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப் பந்தத்தின் மூலம் ஈரான் 300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஈரான் உச்சவரம்புக்கு மாறாக 3 ஆயிரத்து 809 கிலோ யுரேனியத்தை வைத்திருப்பதாக பன்னாட்டு அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. யுரேனிய உலோகத்தை கொண்டு அணு குண்டை தயாரிக்க முடியும் என்பதால் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் ஈரானின் யுரேனிய உற் பத்தி குறித்து அவ்வப்போது கவலை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஈரான் செறிவூட்டப் பட்ட யுரேனிய உலோக உற்பத்தியை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பன்னாட்டு அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment