எஸ்.சி., எஸ்.டி. மக்களை இழிவுபடுத்திய அண்ணாமலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

எஸ்.சி., எஸ்.டி. மக்களை இழிவுபடுத்திய அண்ணாமலை

சென்னை, ஜூன்  1 - பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில் பாஜக-வினர் வாழ்த்துகளை பதிவிட்டு  வரு கின்றனர். அந்த வகையில், தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணா மலையும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நம்பிக்கையின்மையிலி ருந்து நம்பிக்கையை நோக்கி, இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி, பறையாவில் இருந்து விஷ்வ குருவாக...   (From a pariah to a ViswaGuru) 8  ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார், சமூகத் தின் ஒவ்வொரு பிரிவையும் அவர் மாற்றி வருகிறார்” என்று பதிவிட்டுள் ளார். இந்நிலையில் தான், அண்ணாமலை குறிப்பிட்ட பறையர் என்பது பட்டியல் சாதி யின் பெயர் என்பதால், பறையர் பிரிவினை இழிவுபடுத்தும் வகை யில் பதிவிட்டுள்ள அண்ணா மலை மன்னிப்பு கேட்க வேண் டும் என சமூக வலை தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.  விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவும் அண்ணா மலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், “வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம்தான். அப்படிப்பட்ட  மூத்த பறையர் குடியை இழிவுபடுத்தும் ஜாதிய மனநோயாளி அண்ணாமலை (@annamalai_k) மன்னிப்பு கேட்க வேண்டும் என டிவிட் டரில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், “கத்தியைவிட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்பு கிறேன், நான் பதிவிட்ட வார்த் தையின் அர்த்தத்தை பார்க்கவும். வாழ்க வளமுடன்!” என்று பதிவிட்ட அண்ணாமலை, “மேக் மில்லன் சொல் அகராதிப்படி, ‘பறையா’ என்ற சொல்லின் பொருள், ஒரு நபராலோ, அமைப்பாலோ, நாட்டாலோ வெறுக்கப்படுபவர், என்று மட் டுமே அர்த்தம்” என்று தனது  கருத்தை மறுபடியும் நியாயப் படுத்தினார்.

இதையடுத்து, ‘பறையா’ என் பது  இழிவுபடுத்த (offensive)  பயன்படுத்தப்படும் பெயர் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. மேலும், பறையா எனும் சொல் அவமதிக்கும் சொல்லாக தென்னிந்தியாவில் பார்க்கப்படுகிறது என்று  ஆக்ஸ் போர்ட் அகராதி குறிப்பிடுகிறது. நீக்ரோ என்று அமெரிக்காவில் பயன்படுத்தினால் அது அவ மதிப்பு. பறையாவும் அப்படித் தான்” என்று மீண்டும் உறுதி படத் தெரிவித்த வன்னியரசு, மேலும், “பறையா என்பது வர லாற்று அடிப்படையில் தென் னிந்தியாவில் உள்ள தொல்குடி பறையர் சமூகத்தை சேர்ந் தோரை குறிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறையா என்று சொன்னால்  தாழ்த்தப் பட்டோர் வன்கொடுமை சட் டத்தில் வழக்குப்பதிவு செய்ய லாம் என்பது சட்டம்” என பதி லடி கொடுத்துள்ளார்.  இதே போல, பறையா (Pariah)  என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமே, பறையர் எனும் பட்டியல் வகுப் பினரை இழிவுபடுத்தும் சொல் லிலிருந்து எடுக்கப்பட்டவை தான் என்பதால், பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்ற னர். இதற்கு முன்பு பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமியும் ஒருமுறை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்தின் தலைவர் பிரபாகரனை ‘சர்வதேச  பறையா’  (International Paraiya) என  குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார். அவர்  மீது பட்டியல் வகுப்பினர் - பழங் குடியினர் மீதான வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.  வன்னியரசு இதனை யும் சுட் டிக்காட்டி, அண்ணாமலையை எச்சரித்துள்ளார்.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை கோரி

பாஜக தலைவர் அண்ணாமலைமீது ஆவடி காவல்துறை ஆணையரிடம் புகார்

ஜாதியை குறிப்பிட்டு இழிவாக டிவிட்டரில் பதிவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஜாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொரட்டூரை சேர்ந்த அறிவேந்தன் என்ற இளைஞர் புகார் அளித்துள்ளார்.


No comments:

Post a Comment