சென்னை, ஜூன் 4 நாளை (5.6.2022) ஞாயிறு வார நாள் அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமையில் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது.
எனவே, தேர்வர்களுக்கு வசதியாக அன்றைய தினங்களில் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய மார்க்கங்களில் மின்சார ரயில்கள் வார நாள் அட்டவணைப்படி இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment