முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று, கலைஞர் முதல்வ ராகப் பதவியேற்றிருக்கிறார். வள்ளுவர் கோட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, அந்தக் கோட்டத்தைக் கட்டிமுடித்த கலைஞர் அவர்களை அதன் திறப்பு விழாவுக்கு அழைக்காதது மாத்திரமல்ல, அவர் நாட்டிய அடிக்கல்லையும் 13 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி எறிந்தார்கள்.
அவ்வாறு கலைஞர் நாட்டிய அடிக்கல்லை அப்புறப்படுத்தியவர்கள், தமிழ் மக்களின் இதயங் களிலே அவர் அடிக்கல் நாட்டியிருக்கிறார் என்ப தையும், அதனை எந்தக் காலத்திலும் எந்தச் சக்தியும் அப்புறப்படுத்த முடியாது என்பதையும் ஏனோ அறியவில்லை.
13 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் .அவர்கள், அடிக்கல்லை அகற் றியவர்களுக்குச் சரியான பாடம் கற்பித்திருப்ப தோடு, எந்த வள்ளுவர்கோட்டத்தை அவர் உருவாக்கினாரோ, அந்தக் கோட்டத்துக்குள்ளேயே வந்து பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார். இந்த வெற்றி இந்தியாவுக்கே வழிகாட்டுகிற வெற்றி.
No comments:
Post a Comment