சென்னை, ஜூன் 10- சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலே யர் காலத்தில் உருவாக்கப்பட்ட 'சோப்தார்' எனும் உதவியாளர் பதவியை வகிப்பவர், நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து, நீதிமன்ற அறைக்கும், சேம்பரில் இருந்து வீட்டுக்கும் செல்ல, காருக்கு செல்லும் போது, அதா வது உயர்நீதிமன்றம் வளாகத் தில் நீதிபதிகள் வருவதை பொதுமக்களுக்கு தெரியப் படுத்தும் விதமாக நீதிபதிக்கு முன்பு கையில் செங்கோல் ஏந்தி நடந்து செல்வார்கள். அவர்கள் சீருடையாக வெள்ளை நிற ஆடையும், சிவப்பு நிற தலைப்பாகையும் அணிந்து இருப் பார்கள். 160 ஆண்டுக்கால உயர்நீதிமன்றம் வரலாற்றில் இந்த பதவியை ஆண்கள் மட்டுமே வகித்து வந்தனர். இந்த நிலையில், இந்த பதவிக்கு முதல் முறையாக, திலானி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு 40 சோப்தார், 310 அலுவலக உதவியாளர் என்று பல பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், சோப்தார் பதவிக்கு திலானி தேர்வு செய்யப்பட்டு, அண்மையில் பதவி ஏற்றுள்ளார். இவர், நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவுக்கு சோப்தாராக நியமிக்கப் பட்டுள்ளார்.
No comments:
Post a Comment