சென்னை, ஜூன் 3- நரம்பியல், மன வளம் மற்றும் முதியோர் நலம் பேணுதல் முதலானவற்றிற்கு உகந்த சிகிச்சை அளித்து வரும் புத்தி கிளினிக் சென்னை தேனாம்பேட்டை கே.பி. தாசன் சாலையில், உலக தரத்தில் இயங்க புதிய கட்டத்தை திறந்துள்ளது. மருத்துவ அமைப்புகள், வரவேற்பறை, பரிசோதனை அறை, ஆராய்ச்சி அமைப்புகள், பரிசோதனை கூடம் மருந்தகம் முதலியன இதில் இடம்பெற்றுள்ளது. நரம்பியல் மற்றும் மூளை சம்மந்தப்பட்ட சிகிச்சை முறைகள், அவற்றை செயல்பட வைக்கும் செயல்முறைகள், உடற் பயிற்சிகள், மன, குண இயல்புகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த புதிய கட்டடத்தை அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனிதா திறந்து வைத்தார். டாக்டர் எம்ஜிஆர் பல்கலை கழக துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், டாக்டர் எனப்பாடம் எஸ். கிருஷ்ணமூர்த்தி, முருகப்பா குழும முன்னாள் தலைவர் வெள்ளையன், இணை நிறுவனர்கள் ரெமா, ரகு வெங்கட்ரா யன், காயத்திரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment