மருத்துவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

மருத்துவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடில்லி,ஜூன்9- காலியாகவுள்ள முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள் தொடர்பாக தொடரப் பட்ட வழக்கில் மருத்துவர் களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று ஒன்றிய அரசை உச்ச நீதிமன்றம் எச்சரித் துள்ளது.

நாடு முழுவதும் மருத் துவ முதுநிலை படிப்புக ளுக்காக நீட் தேர்வு நடத் தப்பட்டு வருகிறது. அதில் தேர்வு செய்யப்பட்டவர் கள் இடஒதுக்கீடுப்படி கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டு வரு கிறது. அதன்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உரிய ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ஒன்றிய அரசு ஒதுக்கீட்டில் பல இடங்கள் காலியாக உள் ளன. அதன்படி, நடப்பு கல்வியாண்டான 2021-2022 அமர்வில் நாடு முழு வதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 1,456 இடங் கள் காலியாக உள்ளன.

இந்த காலி இடங்களை மாநில அரசின் ஒதுக்கீட் டுக்கு வழங்க தமிழ்நாடு உள்பட பல மாநில அர சுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர் பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங் கிய அமர்வின் முன்பு 8.6.2022 அன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நாடு முழு வதும் மருத்துவர்கள் பற் றாக்குறை உள்ள நிலை யில், மருத்துவ கவுன்சிலும் ஒன்றிய அரசும் மருத் துவர்களின் எதிர்காலத் துடன் விளையாடுகின் றன. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்

காலியாகவுள்ள 1,456 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை ஏன் ஒன்றிய அரசும், மருத்துவ கலந்தாய்வு குழுவும் (எம்சிசி) இன்னும் நிரப்பவில்லை? இதற்காக மற்றொரு சுற்று கலந்தாய்வை நடத்தலாம்.

காலியாக ஒரு இடம் இருந்தாலும் அதை நிரப்ப வேண்டும். அதை வீணாக்கக்கூடாது” என்று தெரிவித்தனர். நேற்றைய விசாரணையின்போது, ஒன்றிய அரசு சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் இந்த வழக்கில் ஆஜராகாத நிலையில் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசு மீது கடு மையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள் மேலும் கூறும்போது, “மருத்துவச் சேர்க்கையில் இது மிகவும் முக்கியமான விவகாரமாக உள்ளது. ஒரு தனி அதிகாரியால் ஒன்றிய அரசு நடத்தப்படவில்லை. ஒன்றிய அரசின் சார்பில் இந்த வழக்கில் ஏன் வழக்குரைஞர் ஆஜராக வில்லை. அவர் நாளை (இன்று) இந்த வழக்கில் ஆஜராக வேண்டும்" என்று தெரிவித்தனர்.

மேலும் வழக்கை வியாழக்கிழமைக்கு (9.6.2022) ஒத்திவைத்த நீதிபதிகள் இந்த விவ காரம் தொடர்பாக ஒன்றிய அர சும், மருத்துவ கலந்தாய்வுக் குழுவும் தங்களது வாதங் கள் தொடர்பான கருத்து களை தாக்கல் செய்யவும் உத்தர விட்டனர்.


No comments:

Post a Comment