டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேற்கு வங்கத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணி நியமன ஊழலில் சிக்கியுள்ள ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் உள்ளிட்ட மூன்று பாஜகவினர் மீது காவல் துறை வழக்கு பதிவு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* மாநிலங்களுக்கான நிதி வருவாயைக் குறைத்து, உரிமைகளை பறிக்கும் வேலையை பாஜக அரசு செய்கிறது என தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு.
* மாநிலங்கள் விருப்பப்பட்டால் தனியே கல்விக் கொள்கையை அமைத்துக் கொள்ளலாம் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் தர தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அயோத்தியில் உருவாகும் ராமன் கோயில் தேசிய கோயில் என்ற உ.பி. முதலமைச்சரின் கூற்று மதச்சார்பற்ற நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது என்கிறது தலையங்க செய்தி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிட டில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவை தமிழ் நாடு அரசு அமைத்தது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment