தீவுகளால் ஆன நாடான ஜப்பான், சுற்றியுள்ள கடலிலிருந்து மின் ஆற்றலைத் தயாரிக்க முடியுமா என ஆராய்ந்து வருகிறது.
குறிப்பாக, கடலுக்கு அடியே இயற்கையாக ஓடும் நீரோட்டத்தின் மூலம் டர்பைன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்க சோதனைகளை தற்போது நடத்தி வருகிறது. ஜப்பானுக்கு அருகே உலகின் அதிக விசையுள்ள கடலடி நீரோட்டங்கள் ஓடுகின்றன.
இத்தகைய நீரோட்ட விசைக்குக் குறுக்கே மின்சாரம் தயாரிக்கும் டர்பைன்களை வைத்தால், அவை தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய முடியும்.
இதைத்தான் அய்.எச்.அய்., மற்றும் 'நெடோ' ஆகிய இரு நிறுவனங்களும், 2017 முதல் சோதித்து வருகின்றன.
சோதனை முயற்சிகளில் 20 மீட்டர் நீளமும் அதே அகலமும் உள்ள டர்பைன்கள் 100 கி.வா., மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. சில ஆண்டுகளில், ஜப்பான், உலகிலேயே அதிகமாக கடலடி மின்சாரம் தயாரிக்கும் நாடாகி விடும்.
No comments:
Post a Comment