சென்னை, ஜூன் 11 தமிழ்நாட்டில் கரோனா பரவல் திடீரென அதிகரித்து வருவது குறித்து இன்று (11.6.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் கடந்த 2 வாரமாக கரோனா பரவல் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக 2 நாட்களில் கரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ளது. கேரளா, மகாராட்டிரா போன்ற மாநிலங்களில் கரோனா கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்த வண் ணம் உள்ளது. வட மாநிலங்களில் கரோனா பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளை ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங் களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.
மகாராட்டிரா மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டா யமாக்கப்பட்டு உள்ளது. கருநாடக மாநிலத் தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 26 ஆயிரமாக இருந்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக நடவடிக்கை மேற் கொண்டார். இதனால் சில மாதங்களிலே கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்காக விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. பொது மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இந்த சூழ்நிலையில் வட மாநிலங்களை அச்சுறுத்தி வரும் கரோனா சில நாள்களாக தமிழ்நாட்டிலும் வேக மெடுக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.6.2022) சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் கரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண் டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் வருவாய் துறை உள்பட உயரதி காரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த என்னென்ன நட வடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக் கும் வகையில் படுக்கைகளை தயார்படுத்தி வைக்குமாறும், தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. கரோனாவை கட்டுக் குள் கொண்டு வர முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயம் ஆக்குவது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என் பது குறித்தும் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டா லின் ஆலோசனை மேற்கொண்டார்.
முதலமைச்சரின் அறிவுரைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆய்வின்போது, கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் இதுவரை கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உய ராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலை யில் வைக்கவேண்டும் என்றும், கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர் வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே ஒருசிலர் கோவிட் தொற் றால் பாதிக்கப்படும்போது, இவர்கள் அனை வரையும் பரிசோதனை செய்து, தொடர் கண்காணிப்பு செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென உத்தர விட்டார்.
கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடித்திடவும், போதிய பரிசோதனை கள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவை யான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தடுப்பூசி ஒன்றே கரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இதுவரை 93.82 விழுக்காடு பேர் முதல் தவணை தடுப்பூசியும், 82.94 விழுக் காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 43 இலட்சம் நபர்கள் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 1.20 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும், என மொத்தம் 1.63 கோடி பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டியுள் ளது.
எனவே, தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அவர்கள் அனை வரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment