கனடா நாட்டில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு: நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவு தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

கனடா நாட்டில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு: நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவு தாக்கல்

ஒட்டாவா, ஜூன் 2 கை துப்பாக்கிக்கள் வைத்திருப் பதற்கு எதிரான சட்ட முன்வரைவு கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டியூடெர்ட் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “ கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமையில் தேசிய முடக்கத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை நாங்கள் அறிமுகப் படுத்துகிறோம். இது தொடர்பாக சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இனி கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது. கைதுப்பாக்கி களுக்கான சந்தையை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்” என்றார். அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத் தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர் காவல்துறையினரால் கொல்லப் பட்டார். பள்ளிச் சிறுவர் களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப் பட்டனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த, ராப் தொடக்கப்பள்ளியில் அமெரிக்க அதிபர் பைடன்   30.5.2022 அன்று நேரில் சென்று பார்வையிட்டு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந் தோருக்கு மரியாதை செலுத் தினார். தொடர் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஆயு தங்கள் வைத்திருப்பதற்கு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வரு கின்றது. இந்த நிலையில் கனடாவில் கைத் துப்பாக்கி களுக்கு தடைவிதித்து மசோதா அமல்படுத்தப் பட்டுள்ளது. கனடா அரசின் இந்த நடவடிக்கை மனித உரிமை ஆர்வலர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குரங்கு காய்ச்சல் வழிகாட்டு 

நெறிமுறைகள் வெளியீடு

புதுடில்லி, ஜூன் 2- குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் கண்காணிக்குமாறு கூறி யுள்ளது. பன்னாட்டளவில் 24 நாடுகளில் சுமார் 400 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், குரங்கு காய்ச்சலை இப்போதே பெருந்தொற்றாக அறிவிக்க முடியாது என்றபோதிலும், இந்நோய் அதிகமாக பரவக் கூடியது என்றும் கூறியுள்ளது.  இந்தியாவில் இதுவரை குரங்கு காய்ச்சல் நுழையவில்லை. இருப்பினும், பல நாடுகளில் பரவி இருப்பதால், அதை தடுப்பதற்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறி முறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:- 

குரங்கு காய்ச்சல் பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும். மேற்கொண்டு பரவுவதை தடுக்க சம்பந்தப் பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும். குரங்கு காய்ச்சல் என சந்தேகத்துக்குரிய மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி, உறுதி செய்ய வேண்டும். குரங்கு காய்ச்சல் பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்களை தொற்று அறிகுறி ஏற்பட்டதில் இருந்து 21 நாட்களுக்கு நாள்தோறும் கண்காணிக்க வேண்டும். நோயாளிகளுக்கும், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் நன்றாக கை சுத்தத்தை பராமரிக்க வேண்டும். முழு கவசஉடை அணிய வேண் டும். அதுபோல், குரங்கு காய்ச்சல் பாதித்த நாடுகளுக்கு சென்று வந்து அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளி களை எல்லா மருத்துவமனைகளும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்புக் குழு

சென்னை, ஜூன் 2- விபத்துகளை தடுக்க மாவட்டம் தோறும் சாலை பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரைத் தலைவராக கொண்டு மாவட்ட சாலை பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த குழுவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 15 பேர் உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சிறப்பு அழைப்பாளராகவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி உறுப்பினர் செயலாளராகவும் செயல்படுவார்கள் என்றும், இந்த குழு மாவட்டத்தில் நடைபெறும் விபத்துகளை தொடர்ச்சியாக ஆய்வு மேற் கொண்டு விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட 25 பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment