திராவிட மகளிரே! திரண்டிடுவோம் திருச்சியிலே!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

திராவிட மகளிரே! திரண்டிடுவோம் திருச்சியிலே!!

ஆணுக்கு ஒரு நீதி!பெண்ணுக்கு ஒரு நீதி!

கூறி நிற்கும் சனாதனத்தின் கொடிய மனுநீதி!

மனு நீதியின் குரல் நெரித்து, மனிதத்தை மீட்டிடவே 

திரண்டிடுவோம் திருச்சியிலே!!


திராவிடத்தின் ஆட்சியிலே திரும்புகின்ற திசையெங்கும்!

ஓங்கி ஒலித்திடுதே பெண்ணுரிமைக் குரல் முழக்கம்!

உரிமை மிகு ஆட்சிக்கு உயிர் அரணாய் நின்றிடவே!

திரண்டிடுவோம் திருச்சியிலே!


கவலையற்று கட்டணமின்றி பயணிக்கிறோம் மகளிர் நாங்கள்!

ஆள்கிறார்கள்!! உலகினுக்கே ஆட்சிமுறை தருகிறார்கள்!!

உஞ்ச விருத்திகளே! ஓசி மாடல் அல்ல! 

உரிமை மாடல்! என முழங்க!

திருச்சியிலே திரண்டிடுவோம்... 


நீட் என்னும் கொடுந்தேர்வு மூட்டிவிட்ட பெருநெருப்பு!

கொத்துக்கொத்தாய் மாணவர் தம் உயிர் குடித்த கொடுந்துயரம்!

கொடுந்துயரம் ஒழித்துக்கட்டி உயர்கல்வி மீட்டிடவே!

திரண்டிடுவோம் திருச்சியிலே!


தொழுது நிற்கும் கரத்துக்குள்ளும் மறைந்து நிற்கும் கொடுவாளாய்!

கல்விக் கொள்கை என்ற பெயரில் புதியதொரு  கருநாகம்!!

கரம் கோத்து கருநாகம் கொன்றொழிக்க! 

 திரண்டிடுவோம் திருச்சியிலே!


உடன்கட்டை ஏறிய சதிகளும் அல்ல 

தீயில் இறங்கிய சீதையும் அல்ல!

நளாயினிகள் நாங்கள் அல்ல!

பணயம் வைக்க பாஞ்சாலிகள் அல்ல!

வீரம் என்னும் வாள் தாங்கிய பெரியாரின் பேத்திகளாய்!

திரண்டிடுவோம் திருச்சியிலே!!


90 அகவைதனை தொடப்போகும் 

நிலையினிலும் துவளாத இளைஞர் அவர்!

உயிரையே பணயம் வைத்து ஓயாத நெடும்பயணம்!

பெரும்பயண நாயகருக்கு பெருமையுடன் தோள் கொடுக்க!

திரண்டிடுவோம் திருச்சியிலே!!

- தகடூர் தமிழ்ச்செல்வி


No comments:

Post a Comment