எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க

சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, ஜூன் 29- கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வர் சித்தராமையா செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஜனநாயகத்தை காப்பாற் றுவதாக பா.ஜனதா தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் மராட் டிய மாநிலத்தில் அக்கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது?. நெருக்கடி நிலையை அமல்படுத் தியது ஜனநாயகத்திற்கு எதிரா னது என்று அவர்கள் குறை சொல்கிறார்கள். அப்படி என் றால் அவர்கள் இப்போது செய்து கொண்டிருப்பது என்ன?. மத்தியப் பிரதேசம், கருநாடகத் தில் இருந்த அரசுகளை சட்டவிரோதமாக செயல்பட்டு கவிழ்த்தது யார்?. ஆபரேஷன் தாமரையை ஆரம்பித்தது யார்?. இந்த ஆபரேஷன் தாமரை மூலம் விலைக்கு வாங்கப்படும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.30 கோடி பணம் கொடுக்கப் படுகிறது.  

இதற்கு பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?. பா.ஜனதாவிடம் ஆட்சி அதிகாரம் மற்றும் பணம் ஆகிய இரண்டும் இருப்பதால் எதிர்க் கட்சிகளின் ஆட்சியை கவிழ்க் கிறார்கள். ஜனநாயகத்திற்கு ஆபரேஷன் தாமரை எதிரானது என்று தெரிந்தும், பா.ஜனதா பாவத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி எதிர்க் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பி னர்களை விலைக்கு வாங்குகிறது.  -இவ்வாறு சித்தராமையா கூறினார்.

No comments:

Post a Comment