இடைநின்ற மாற்றுத் திறனாளிகளை கண்டறிய வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

இடைநின்ற மாற்றுத் திறனாளிகளை கண்டறிய வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை, ஜூன் 9  இடைநின்ற மாற்றுத்திறனாளிகளை கண்ட றிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்ற றிக்கை விவரம்:

தமிழ்நாட்டில் 18 வயது வரை யுள்ள மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளிகள், பள்ளி ஆயத்தப் பயிற்சி மற்றும் வீட்டுவழிக் கல்வி மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இதற்கிடையே 6 முதல் 18 வயது வரையான பள்ளி செல்லாத, புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளை கண் டறியும் பணிகள் ஆண்டுக்கு 3 முறை நடைபெற்று வருகிறது. அதன்படி 2022- - 2023ஆம் கல்வி யாண்டில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மாற்றுத்திறன் குழந்தைகளை குடியி ருப்பு வாரியாகச் சென்று கண்டறிய வேண்டும்.

அதன்பின் அந்த மாணவர்களை பள்ளி ஆயத்த பயிற்சி மய்யங்களில் சேர்த்து 3 மாதங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். தொடர்ந்து அவர்களின் இயலாமை நிலையை பொருத்து அருகே உள்ள பள்ளிகளில் சேர்த்து அவர்கள் மேல்நிலைக் கல்வியை தொடரும் வகையில் வழிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கொண்ட குழு கணக்கெடுப்பு மற்றும் பதிவேடு புதுப்பித்தல் பணியை செய்து முடிக்க வேண்டும்.

தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராமல் இருத்தல், அடிக் கடி பள்ளிக்கு வராமல் இருத்தல், பள்ளியே செல்லாத வர்கள், 8ஆம் வகுப்பு முடித்து இடைநின்றவர்கள் ஆகியோர் பள்ளி செல்லாத மற்றும் இடை நின்ற மாணவர்களாக கருதப்படுவர். 

இந்த குழந்தைகளை கண்டறிய பள்ளி செல்லா குழந்தை களுக்கான அலைபேசி செயலியைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment